கோவில் விழாவிற்குச் சென்ற பக்தர்கள்
17 பேர் டிராக்டர் கவிழ்ந்து பரிதாப மரணம்
லக்னோ ஏப் 16 உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் ட்ராலி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந் தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜ ஹான்பூரில் இந்த விபத்து நடந்துள்ளது. ட்ராக்டரில் இருந்த மக்கள் பக்வத் கதா நிகழ்ச்சிக்காக கரா ஆற்றிலிருந்து நீரெ டுக்கச் சென்றனர். அப்போது அந்த விபத்து நடந்துள்ளது.
விபத்தின் போது ட்ராக்டர் ட்ராலி யில் 30க்கும் மேற்பட்டோர் இருந்துள்ள னர். இது குறித்து ஷாஜஹான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் 17 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். பலரும் படு காய மடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அரசு பொது மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித் துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். நிகழ்விடத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment