இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக் கெடுப்புக்கான கூச்சல் அதிகரித்து வரும் நிலையில், கோரிக்கைக்கான வரலாறும் காரணங்களும் இங்கே உள்ளன.
தி இந்து:
* 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.,வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைப்பது குறித்து ஒன்றாக அமர்ந்து ஆலோசிப்போம். கருநாடக தேர்த லுக்குப் பின்னர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் - நிதிஷ்குமார் பேச்சு.
* அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் சீர்குலைந்துள்ளதால், ஒன்றிய - மாநில உறவுகள் தாழ்ந்த நிலையில் உள்ளன என்கிறார் டி.ராஜா
தி டெலிகிராப்:
* பன்னாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் போது, தேநீர் அருந்துமாறு பிரதமர் அழைப்பு விடுப்பார். அவர்கள் நீதிக்காக வீதியில் இறங்கி போராடி, நெருக்கடி யில் இருக்கும் போது, தீர்வு காணவில்லை. இவ்வாறு இரட்டை முகத்துடன் மோடி இருக்கிறார் என பிரியங்கா குற்றச்சாட்டு.
* மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் சிபிஎம். உறுப்பினர் ஜான் பிரிட்டாஸை வரவழைத்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவர் எழுதிய செய்தித்தாள் கட்டுரைக்கு விளக்கம் கேட்டார், இது இடதுசாரி தனக்கு "அதிர்ச்சியும் குழப்பமும்" ஏற்படுத்திய தாக பிரிட்டாஸ் கருத்து.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உலகின் மிகப் பெரிய போலி செய்தித் தொழிற் சாலை பாஜக என்றும், சமூகத்தில் பிளவை ஏற்படுத்தவும், வகுப்புவாத ஒற்றுமையை உருவாக்கவும் தவறான தகவல்களை ஆயுதமாக்குகிறது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா சிரினேட் தெரிவித்துள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment