ஆளுநர்களின் அத்துமீறல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மம்தா கருத்துப் பரிமாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 20, 2023

ஆளுநர்களின் அத்துமீறல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மம்தா கருத்துப் பரிமாற்றம்

சென்னை, ஏப். 20- தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க  ஆளுநருக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த தீர்மானத்தை இணைத்து, பா.ஜ.க. அல்லாத மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கடிதம் எழுதினார். அதில், இதேபோன்ற தீர்மானத்தை அந் தந்த மாநில சட்டப் பேரவைகளிலும் நிறைவேற்றும்படி மு.க.ஸ்டா லின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்த டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது கடிதத்தில், ‘மாநில சட்டப் பேரவைகளால் நிறைவேற்றப்படும் சட்ட முன்வடிவுகளை ஆளுநர்கள் ஒப்புதல்அளிப்பதற்காக காலக் கெடுவை நிர்ணயிக்கக் கோரி, ஒன்றிய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தும் தீர் மா னத்தை நிறைவேற்றியதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவையை நான் பாராட்டுகிறேன்.

அதே வழியில், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், தங் களின் அரசியல் சாசனப் பணி களை மேற்கொள்ள காலக் கெடுவை நிர்ணயம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் கூட்டத் தொடரில் டில்லி சட்டப் பேரவையில் நான் தீர்மானம் தாக்கல் செய்வேன்" என்று கூறியிருந்தார்.

அவரைப் போலவே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் தனது ஆதரவை தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்திருந்தார்.

இவர்கள் வரிசையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து மம்தாவுக்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் அது தொடர்பாக தனது  வலைதள  பக்கங்களில், "மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பா.ஜ.க. அல் லாத மாநிலங்களில் ஆளுநர்களின் ஜனநாயக விரோத செயல்பாடு களுக்கு எதிரான முயற்சிகளுக்கு தனது ஆதரவையும் பாராட் டையும் தெரிவித்தார்.

மேலும், அடுத்த கட்ட நடவ டிக்கை குறித்து முடிவு செய்ய அனைத்து எதிர்க்கட்சி முதலமைச் சர்களும் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்" என்று பதிவிட் டுள்ளார்.

No comments:

Post a Comment