உற்சாகப்படுத்தி, கைதட்டினால் மட்டும் போதாது இளைஞர்களே,
ஜாதி, தீண்டாமையின் அடிவேரை வெட்டுகின்ற வரையில்,
களத்திலே நிற்போம், எங்கள் உயிரையும் கொடுப்போம் என்று உறுதியெடுத்துக் கொள்ளவேண்டும்!
கடலூர், ஏப்.4 உற்சாகப்படுத்தி, கைதட்டினால் மட்டும் போதாது இளைஞர்களே, ஜாதி, தீண்டாமையின் அடிவேரை வெட்டுகின்ற வரையில், களத்திலே நிற்போம், எங்கள் உயிரையும் கொடுப்போம் என்று உறுதியெடுத்துக் கொள்ளவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழா
கடந்த 31.3.2023 அன்று மாலை கடலூரில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இலக்கிய வகுப்பு நடத்தினார் சட்டப்பேரவையில் நம்முடைய அமைச்சர்!
நம்முடைய அமைச்சர் அவர்கள், சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை ஒன்றரை மணிநேரம் படித்தார்; படித்தார் என்று சொல்வதைவிட, அவர் செம்மொழி இலக்கிய வகுப்பு நடத்தினார் என்றுதான் சொல்லவேண்டும்.
புறநானூறில் என்ன இருக்கிறது; அகநானூறில் என்ன இருக்கிறது என்று சொல்லி, நம்மூர் கிராமத்துப் பழமொழியைக்கூட அவர் விடவில்லை. அதைப் பார்த்த எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழலில், இன்றைக்கு இயக்கங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
அதேபோலத்தான், நம்முடைய காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகர துணை மேயரான அருமைக்குரிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த தாமரைச்செல்வன் அவர்கள்,
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கண்ணன். செயலாளர் ஆனந்த், வி.சி.க. அமைப்புச் செயலாளர் திருமார்பன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் துரை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட் டச் செயலாளர் ராமலிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் முல்லைவேந்தன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளர் திலகர், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலாளர் பாலு, திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், சுப்பிரமணியன், தனஞ்செயன், நகரப் பொறுப்பாளர் நம்முடைய ராஜா,
நம்முடைய இயக்கத்தைப் பொறுத்தவரையில், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மண்டல தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் தாமோதரன், மாநகர தலைவர் சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் மணிவேல், பொதுக்குழு உறுப்பினர் புத்தன், மண்டல இளைஞரணி செயலாளர் பஞ்சமூர்த்தி, மண்டல இளைஞரணி செயலாளர் ரமாபிரபா ஜோசப், கழக அமைப்புச் செயலாளர் மதுரை செல்வம், பொன்னேரி பன்னீர்செல்வம், கழக தொழி லாளரணி செயலாளர் சேகர், பெரியார் வீர விளை யாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியம், திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், புதுவை மாநில செயலாளர் சிவ.வீரமணி, பொதுச்செயலாளர்கள் அன்புராஜ், துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் குணசேகரன், என்று இப்படி நீண்ட பட்டியல்.
சிலர் நினைக்கலாம், ‘‘இவ்வளவு நீண்ட பட்டியலை இந்த நேரத்திலும் அவர் சொல்லணுமா?'' என்று.
எங்களுடைய உடலின்
அங்கங்களாக இருக்கக்கூடிய கொள்கைத் தங்கங்கள்!
ஆனால், எங்கள் இயக்கத்தில் நாங்கள் என்ன எம்.எல்.சி. பதவியா கொடுக்கப் போகிறோம்? இல்லையே! வேறு ஏதாவது பரிசு கொடுக்கப் போகிறோமா, இல்லையே! அப்படிப்பட்ட இடத் தில், என்னுடைய பூரிப்பு, நான் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறேன் என்றால், எங்களுடைய உடலின் அங்கங்களாக இருக்கக்கூடிய கொள்கைத் தங்கங்கள் அத்துணை பேரும்.
ஆகவே, இந்த நிகழ்ச்சியைப் பார்க்கின்றபொழுது மிக உற்சாகமாக இருக்கிறது.
57 பொதுக்கூட்டம்; மொத்த பயண நாட்கள் 30
பெட்ரோல், டீசலுக்கான செலவை நாங்கள் கொடுத்துவிடுகிறோம் என்று சொன்னார்கள்.
எங்கள் தோழர்களுக்குக் களைப்பில்லை -
அதனால் எனக்கும் களைப்பில்லை!
நாங்கள் பயணம் செய்த கிலோ மீட்டர் 6478, இந்த 30 நாள்களில்.
எங்கள் ஓட்டுநர்களுக்குக் களைப்பில்லை; என்னோடு வந்த தோழர்களுக்குக் களைப்பில்லை. அவர்களுக்கெல்லாம் களைப்பில்லை என்ப தினால், எனக்குக் களைப்பில்லை.
அண்மைக் காலத்தில் பொதுக்கூட்டம் என்றாலே, கரோனா தொற்று காலகட்டத்திற்குப் பிறகு, யாருமே வெளியே வருவதில்லை. சிலர் கூட்டம் சேர்ப்பதற்காக அவர்களை அழைத்துக்கொண்டு வருவதாக இருக் கிறதே, தவிர, தானாக வருவதில்லை. அழைத்து வந்தக் கூட்டம் என்றால், சில கூட்டங்கள் கலையும்.
ஆனால், நம்முடைய கூட்டங்களில், நேரம் அதிக மானால், கூட்டம் அதிகமாகிறதே தவிர, குறையவில்லை.
மக்கள் மத்தியில், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும், இன்றைய முதலமைச்சரும், திராவிட இயக்கமும், அதேபோன்று தேசிய இயக்கங்களும், இடதுசாரிகளும் எந்த அறி வார்ந்த உணர்வை உருவாக்கினார்களோ, அந்த உணர்வை இன்றைக்கு வைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஏன் வைக்கம் நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும்?
நூறாண்டுக்கு முன்பு நடந்ததை இப்பொழுது ஏன் அதைப்பற்றி சொல்லவேண்டும் நண்பர்களே?
சுருக்கமாக ஒன்று சொல்கிறேன்.
இன்னமும் அங்கே ஜாதி இருக்கிறதே - அதைத் தானே நம்முடைய எழுச்சித் தமிழர் சொன்னார், அதைத்தானே அமைச்சரும் சொன்னார், அதைத்தானே இங்கே நண்பர்களும் சொன்னார்கள்.
இன்னமும் ஜாதி வெறி, எவ்வளவு கொடுமையாக இருக்கிறது. இப்பொழுது புதிதாக வந்திருப்பவர்கள், பெரியார் மண்ணை காவி மண்ணாக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உறுதியெடுத்துக் கொள்ளவேண்டும்!
வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற இந்தக் காலகட்டத்தில் நாம் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எழுச்சித் தமிழரைப் பார்த்து உற்சாகப்படுத்தி, கைதட்டினால் மட்டும் போதாது இளைஞர்களே, ஜாதி, தீண்டாமையின் அடிவேரை வெட்டுகின்ற வரையில், களத்திலே நிற்போம், எங்கள் உயிரையும் கொடுப்போம் என்று நாம் உறுதியெடுத்துக் கொள்ளவேண்டும்.
இது கைதட்டிவிட்டுப் போகின்ற விஷயம் அல்ல நண்பர்களே!
குடி போதை, பக்தி போதை, கஞ்சா போதையெல்லாம் மிகப்பெரிய ஆபத்துதான்.
ஜாதி, மத போதை, எல்லா போதைகளையும்விட ஆபத்தானவை!
ஆனால், எல்லா போதைகளையும்விட, ஜாதி போதை, மத போதை என்பது அவற்றையெல்லாம்விட ஆபத்தானவை.
உச்சநீதிமன்றத்தில் நேற்று சொல்லியிருக்கிறார்கள், அரசியலையும், மதத்தையும் கலக்காதீர்கள் என்று.
இன்றைக்கு மதத்தின் அடிப்படையில்தானே இவ் வளவு பெரிய கலவரத்தை உருவாக்குகிறார்கள்.
இன்றைக்குக் காலையில் வெளிவந்த பார்ப்பன ஏடான தினமலரில், சிறீராம நவமி கொண்டாடுகிறார்கள் உற்சாகமாக என்று. வந்த செய்தியை நீங்கள் படித்துப் பாருங்கள்.
எல்லா ஊர்களிலும் கடவுளை கொண்டாடுகின்ற நேரத்தில், களை கட்டியது சிறீராமன் கொண்டாட்டம் என்பது அந்த செய்தி.
சரி, திருவிழா - பக்தர்கள் கொண்டாடட்டும். நமக்கு ராமன் மேல் ஒன்றும் கோபமில்லை.
ஆனால், உள்ளே உள்ள செய்தியைப் படித்துப் பார்த்தீர்கள் என்றால், வடநாட்டில், இந்த ஊரில் கலவரம், அந்த ஊரில் கலவரம், முழுவதும் கலவரம் என்றால், உண்மையான பக்தனாக இருக்கின்றவர்கள், வெறும் மூடநம்பிக்கையில் உழலக்கூடிய, பக்தி நம்பிக்கை உள்ளவர்கள், கும்பிடுவதோடு விட்டுவிடவேண்டும்.
திருவிழாக்கள், ஊர்வலம் என்கிற பெயரில், சிறுபான்மை மக்களின்மீது
குறி வைக்கிறார்கள்!
ஆனால், அதைப் பயன்படுத்திக்கொண்டு, ஒரு காவிக் கூட்டம் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, திருவிழாக்கள் என்ற பெயரில், ஊர்வலம் என்கிற பெயரில், சிறுபான்மை மக்களின்மீது குறி வைக்கவேண்டும் என்று நினைக் கிறார்கள்.
இங்கேயும்தான் ஊர்வலம் வந்தார்கள் நம்முடைய கழகத்துக்காரர்கள் - ஒரு சிறு அசம்பாவிதமாவது உண்டா? இதுபோன்று வடநாட்டிலோ, வேறு எந்த மண்ணிலாவது சுலபமாக நடத்திவிட முடியுமா?
இது பெரியார் மண்;
இது பகுத்தறிவு பூமி!
காரணம், இது பெரியார் மண்; இது பகுத்தறிவு பூமி; இது அம்பேத்கருடைய கருத்து - பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழ் அறிஞர் கலைஞர், இன்றைய திராவிட மாடல் ஆட்சியினுடைய ஒப்பற்ற முதலமைச்சர் இத் தனை பேரும் இந்த மண்ணை பக்குவப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
ஆகவேதான், இந்த சூழல் இன்றைக்கு வந்திருக்கிறது.
நம்முடைய பயணத்தின் நோக்கம் சமூகநீதி.
சமூகநீதி நாள் - சமத்துவ நாள்:
‘திராவிட மாடல்' ஆட்சி அறிவிப்பு!
சமூகநீதி என்றால் என்ன?
தந்தை பெரியார் பிறந்த நாளா?
செப்டம்பர் 17 - சமூகநீதி நாள் என்று அறிவித்தது திராவிட மாடல் ஆட்சியில்தானே!
புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கருடைய பிறந்த நாளா?
ஏப்ரல் 14 - சமத்துவ நாள் என்று அறிவித்தது இந்த ‘திராவிட மாடல்' ஆட்சி!
வடலூர் வள்ளலார் - ‘‘வாடிய பயிரைக் கண்டபொழு தெல்லாம் வாடினேன்'' என்று பாடினாரே, அந்த வடலூர் வள்ளலாரின் பிறந்த நாளை, கருணை நாள் என்று அறிவித்தது.
மனிதநேயத்தோடு
இருக்கக்கூடிய ஓர் ஆட்சி!
இப்படி மனிதநேயத்தோடு இருக்கக்கூடிய ஓர் ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்பதற்காக, அதை நேரிடையாக செய்ய முடியவில்லை என்பதினால், ஆளுநர்மூலமாகக் கருவியைக் கொண்டு வருகிறார்கள். அரசியல் கருவி. ஏனென்றால், இங்கே எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க முடியாது - வடமாநிலங்கள் போன்று.
இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு நாங்கள் வளர்ந்திருக்கின்றோம் என்று சொல்கிறார்களே, ஏழு, எட்டு மாநிலங்களில் அதிக வாக்குகளைப் பெற்றிருக் கிறார்களே தவிர, அதில்கூட பார்த்தீர்களேயானால், 35, 40 விழுக்காட்டிற்குமேல் போனதில்லை. அப்படியானால், அவர்களுக்கு எதிராக 60 விழுக்காடு மக்கள் இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். இவ்வளவு பக்குவப்படுத் தப்பட்டும், இன்னமும் ஜாதிக்கலவரம்.
நாங்கள் ஜாதி ஒழிப்பிற்காக முயற்சி செய்கிறோம். அவர்கள் திட்டங்கள் போடுகிறார்கள்; எல்லா மக்களுக் கும் வாய்ப்புகள் தரப்படவேண்டும் - அதேபோன்று, பெண்ணடிமை ஒழிப்பு - பெண்களுக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு.
‘‘சொன்னதை செய்வோம் - சொல்லாததையும் சேர்த்துச் சேர்த்துச் செய்வோம்!’’
‘‘சொன்னதை செய்வோம் - சொல்லாததையும் சேர்த்துச் சேர்த்துச் செய்வோம்'' என்று சொல்லுகின்ற ஓர் ஆட்சி இருக்கின்ற காரணத்தினால்தான், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உள்பட, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் உள்பட, கல்லூரிப் படிப்பிற்குச் செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்- ஓராண்டிற்கு 12 ஆயிரம் ரூபாய்.
எந்தச் சூழ்நிலையில்?
நிதி நெருக்கடி இருக்கும் காலகட்டத்தில்.
பட்ஜெட் போடும்பொழுது நிறைய திட்டங்களை சொல்லியிருக்கிறார்.
பொது பட்ஜெட்!
பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று, செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
‘‘சோசியல் என்ஜினியரிங்!’’
ஆனால், ஒரு பக்கத்தில் மதத்தைத் தூண்டிவிடுவது; இன்னொரு பக்கத்தில் ஜாதி அடிப்படையில் எதைச் சொல்லுகிறார்கள் என்று சொன்னால், நண்பர்களே, ‘‘நம்ம ஜாதி பெருமையுடையது; நம் ஜாதி பெருமை யானது; அந்த ஜாதியைவிட பெருமையானது'' என்று ஜாதி வேறுபாட்டை வளர்க்கின்றனர். ஆங்கிலத்தில் ஒரு பெரிய வார்த்தையை சொல்லுகிறார்கள் ‘‘சோசியல் என்ஜினியரிங்''
எங்களுக்குத் தெரியாத என்ஜினியரிங்களா?
வகுப்புரிமையைவிட, சமூகநீதியைவிட பெரிய சமூக அமைப்பில் வேறு என்ன செய்ய முடியும்?
அந்த சமூகநீதியைப்பற்றி நம்முடைய சகோதரர் உரை யாற்றும்பொழுது சொன்னாரே, EWS - சமூக நீதியை ஒழிப்பதற்காக அதைக் கொண்டு வருகிறார்கள்.
பசியேப்பக்காரனுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்!
யாருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும்?
யாருக்கு பந்தியில் முன்னுரிமை கொடுக்கவேண்டும்?
பசியேப்பக்காரனுக்கு முன்னுரிமை கொடுக்கவேண் டும். அப்படியில்லாமல், நிறைய சாப்பிட்டு, உண்டு, உண்டு ஊதிக் கொழுத்திருக்கின்றானே, அவனுக்கு முன்னுரிமை கொடுப்பதா?
அதுமட்டுமல்ல, சொல்வதற்குக் கவர்ச்சிகரமாக, ஏமாற்றுவதற்காக சொல்வது, சமூகநீதியை ஒழிப் பதற்காக.
10 சதவிகித இட ஒதுக்கீடு- உயர்ஜாதி ஏழைகளுக்கு!
ஏழைகள் என்றால், தெரியும்; அது என்ன உயர்ஜாதி ஏழைகள்?
(தொடரும்)
No comments:
Post a Comment