புதுடில்லி, ஏப் 19 ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு மல்லி கார்ஜுன கார்கே கடிதம் எழுதி உள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண் டும் என்று கருநாடக மாநிலம் கோலாரில் பொதுக்கூட்டத் தில் பேசிய ராகுல்காந்தி கோரிக்கை விடுத்தார். இந் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அதே கோரிக்கையை விடுத் துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மல்லிகார்ஜுன கார்கே கூறி இருப்பதாவது:-
தற்காலத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண் டும் என்ற இந்திய தேசிய காங்கிரசின் கோரிக்கையை மீண்டும் முன்வைக்க இந்த கடிதத்தை எழுதுகிறேன். மற்ற எதிர்க்கட்சி தலைவர்களை போல், நானும், என் சகாக்களும் எத்தனையோ தடவை நாடா ளுமன்றத்தில் இக்கோரிக் கையை எழுப்பி இருக்கிறோம். வெளியிடப்படவில்லை நாட் டிலேயே முதல்முறையாக 2011-_2012ஆ-ம் ஆண்டில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. ஆனால், ஜாதிவாரி விவரங்கள் வெளியிடப்படவில்லை. 2014-ஆம் ஆண்டு மே மாதம், உங்களது ஆட்சி வந்த பிறகு, காங்கிரஸ் கட்சி எத்தனையோ தடவை கேட்ட பிறகும் அந்த விவரம் வெளியிடப்பட வில்லை. தற்காலத்திய ஜாதிவாரியிலான புள்ளி விவரங்கள் இருந்தால்தான், இதர பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சமூகத்தினருக்கு அர்த்தமுள்ள சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் திட்டங் களை திறம்பட நிறைவேற்ற முடியும். அந்த விவரங்கள் இல்லாததால், அத்திட்டங்கள் அரைகுறையாகவே இருக்கும். மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருதடவை நடத்தப்படும் வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2021-ஆம் ஆண்டு நடத்தப் பட்டிருக்க வேண்டும். அதுவும் இன்னும் நடத்தப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது ஒன்றிய அரசின் பொறுப்பு. ஆகவே, ஒன்றிய அரசு உடனடியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதில், ஜாதிவாரி கணக்கெடுப்பு விவ ரங்களும் இடம்பெற வேண் டும் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment