புதுடில்லி,ஏப்.16- மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மத்தியப் பிரதேச நீதித்துறையில் மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் ரூபேஷ் சந்திர வர்ஷ்னி.
இவரது பெயரை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு முன்பும் நீதிபதிகள் பஹருல் இஸ்லாம் (1980), பாத்திமா பீவி (1989) ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
அந்த அடிப்படையில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரூபேஷ் சந்திர வர்ஷ்னியின் நீதித்துறை பணிகள் சிறப்பாக இருந்ததால் அவரது பெயரை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. வர்ஷ்னியைத் தவிர, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு அனுராதா சுக்லா, சஞ்சீவ் சுதாகர் கல்கோன்கர், பிரேம் நாராயண் சிங், அச்சல் குமார் பாலிவால், ஹிர்தேஷ், அவ்னிந்திர குமார் சிங் ஆகியோரின் பெயர்களை கொலிஜியம் பரிந்துரைத்தது.
No comments:
Post a Comment