கருநாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நடிகர் கமலஹாசனுக்கு அழைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

கருநாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நடிகர் கமலஹாசனுக்கு அழைப்பு

பெங்களூரு, ஏப்.29-கருநாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யுமாறு ராகுல் காந்தி அழைப்பு விடுத்ததாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

வரும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, கட்சியின் கோவை, சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் கோவையில் 27.4.2023 அன்று நடைபெற்றது. 

இதில் கமல்ஹாசன் பேசியதா வது: ஜனநாயகத்தைப் பாதுகாக்க, கட்சியின் செயல்பாடுகளை வேகப்ப டுத்த வேண்டும். நிர்வாகிகளின் செயல் பாடுகள் அடிப்படையில் பொறுப்பும், அங்கீகாரமும் வழங்கப்படும். மக் கள் நம் மீது வைத்திருக்கும் நம் பிக்கை, ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தெரிந்தது.

வரும் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேசத் தேவையில்லை. அதற்கு நேரம் இருக்கிறது. கருநாடக மாநில சட்டப் பேரவைத் தேர்த லில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதர வாகப் பிரச்சாரம் செய்யுமாறு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார். 

மேலும், கருநாடக காங்கிரஸ் கட்சியிலிருந்தும் கடிதம் வந் துள்ளது. அங்கு பிரச்சாரம் மேற் கொள்வது குறித்து விரை வில் முடிவெடுக்கப்படும். இறையாண் மையைப் பாதுகாக்க யார் அழைத் தாலும் நான் செல்வேன்.

மக்களவைத் தேர்தல் முன்னேற் பாட்டுப் பணிகளை கட்சியினர் தீவிரப்படுத்த வேண்டும். குறிப் பாக, கட்சி நிர்வாகிகள் களப்பணி மேற்கொள்வது முக்கியம். மக்கள வைத் தேர்தல் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை, நிர்வாகிகளின் செயல்பாடுகள் சொல்லும். இவ் வாறு அவர் பேசினார்.

பின்னர் கமல்ஹாசன் செய்தி யாளர் களிடம் கூறும்போது,‘‘வரும் மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவெடுக் கப்படும்.

அதற்கான முன்னேற்பாடுதான் இந்த ஆலோசனைக் கூட்டம். அரசியல் சாசனத்துக்கு ஆபத்து வரும்போது, அதைக் காப்பாற்ற கட்சி பேதங்களைக் கடந்து அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுக்க வேண்டியது அனை வரின் கடமை” என்றார்.

No comments:

Post a Comment