சென்னை, ஏப். 15- தமிழ்நாட்டில் சிறைவாசிகளுக்கு ‘வீடியோ கால்' வசதி சோதனை முறையில், சென்னை புழல் சிறையில் நேற்று (14.4.2023)தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில், மாநில சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சிறைகளில் கைதிகளுக்கு வீடியோ கால் வசதி அறிமுகப் படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அமல்படுத்தும் வகையில், புழல் பெண்கள் தனிச் சிறையில் கைதிகளுக்கு ‘வீடியோ கால்' வசதி சோதனை முறையில் 14.4.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இதை சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி, தொடங்கி வைத்தார். சிறைத் துறை டிஅய்ஜி-க்கள் ஆர்.கனகராஜ் (தலைமையிடம்), ஆ.முருகேசன் (சென்னை சரகம்), கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரன், ஆர்.கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தப் புதிய வசதியால், கைதிகள் குடும்ப உறுப்பினர் களை வீடியோ கால் மூலம் மாதத்தில் 10 முறை தொடர்பு கொள்ளலாம். அவர்கள் ஒவ்வொரு அழைப்பிலும் 12 நிமிடங்கள் வரை பேச முடியும்.
இதன் மூலம் ஒரு கைதி மாதத்துக்கு 120 நிமிஷங்கள் குடும்பத்தினருடன் பேசலாம். புழல் பெண்கள் தனிச் சிறையில் ஒரு மாதம் சோதனை முறையில் இந்த வசதி செயல்படுத்தப்படும். இதில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இந்த வசதி தொடங்கப்படும். சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி இந்த திட்டத்தை தொடங்கிவைத்து கூறுகையில், இந்த வசதி மூலம் நீண்ட தூரத்தில் இருக்கும் குடும்பத்தினரையும், சந்திக்க முடியாத நிலையில் இருக்கும் குடும்ப உறுப்பினர் களையும் கைதிகள் ‘வீடியோ கால்' மூலம் தொடர்பு கொண்டு நேரலையில் பேசலாம். இந்த வசதிகள் கைதிக ளுக்கு சிறந்த குடும்ப இணைப்பை வழங்குவதுடன், மன அழுத்தத்தைக் குறைக்கும். மேலும், கைதிகளின் மனதில் இத்திட்டம் சீர்திருத்தத்தைக் கொண்டுவர உதவும் என்றார்.
உயர் நீதிமன்றங்களில் முகக்கவசம் கட்டாயம்
சென்னை, ஏப். 15- சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் வரும் 17ஆம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்குகள் பட்டிய லிடப்படாதவர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவல் எதி ரொலியாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாணவர்கள் குறை தீர்ப்பு குழுக்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் கட்டாயம் இடம்பெறவேண்டும்: யுஜிசி உத்தரவு
புதுடில்லி, ஏப். 15- உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் குறை தீர்ப்பு குழுக்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் (எஸ்சி), பழங்குடிகள் (எஸ்டி), இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் (ஓபிசி) மற்றும் பெண்கள் தலைவராகவோ அல்லது உறுப்பினர்களாகவோ நியமிக்கப்படுவதை பல் கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கட்டாயமாக்கியுள்ளது.
அண்மையில் யுஜிசி (மாணவர்கள் குறை தீர்ப்பு) ஒழுங்காற்று விதிமுறைகள் 2023 வெளியிடப்பட்டது. இந்தப் புதிய விதிமுறைகளின்படி, உயர் கல்வி நிறுவனங் களின் மாணவர்கள் குறை தீர்ப்பு குழுக்களில் குறைந்த பட்சம் ஓர் உறுப்பினர் அல்லது தலைவராக எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தினர் மற்றும் பெண்கள் இடம்பெற வேண் டும். அனைத்து கல்வி நிறுவனங்களும் புதிய விதிமுறை களைப் பின்பற்ற வேண்டும் என்று யுஜிசி கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் கூறுகையில், ‘ஜாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்த புகார்களுக்குத் தீர்வு காண, மாணவர்கள் குறைதீர்ப்பு விதிமுறைகள் 2023 கூடுதலாக ஓர் இடத்தை வழங்கும். ஜாதி, மதம், மொழி, இனம், பாலினம், உடல் குறைபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த மாணவருக்கும் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய, ஏற்கெனவே யுஜிசி வெளியிட்டுள்ள இதர விதிமுறைகள்/வழிகாட்டுதல்களை புதிய விதிமுறைகள் மாற்றாது’ என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment