காஞ்சிபுரம், ஏப். 24- காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது மக்கள் காவல்துறைக்கு தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்க “Petition Enquiry and Tracking System” என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நிலையில் அதனை கண்காணிக்க காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கு மடிக் கணினியை காஞ்சிபுரம் சரகம் காவல் துறை துணைத் தலைவர் றி.பகலவன் அய்பி எஸ் வழங்கி னார்.
காஞ்சிபுரம் காவல் மாவட் டத்தில் 2 உட்கோட்டங்களும், 12 சட்டம் ஒழுங்கு காவல் நிலை யங்களும், 2 மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களின் வசதிக்கேற்ப, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, எளிதாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறவும் அவற்றை சம்மந்தப்பட்ட காவல் அதிகாரி களுக்கு அனுப்பி மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் Petition Enquiry and Tracking System என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இச்செயலியின் மூலம் முதலாவதாக,மனு கொடுப்ப வரின் விவரமும்,மனுவின் தன்மை பற்றியும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்து அதற்கென தனியாக ஒரு மனு எண் (Complaint ID) ஒதுக்கப்படும்.இரண்டா வதாக,அம்மனுவினை விசாரிக்கும் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு அம்மனுவின் மீது எடுக்கபட்ட நடவடிக் கையின் விவரத்தை பதிவேற்றம் செய்யப்பட்டு பொது மக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரத்தை தெரிவிக்கப்படும்.
No comments:
Post a Comment