கருநாடாவில் ஹிந்தியா?
கன்னடர்கள் கொந்தளிப்பு
கருநாடகாவில் அமித்ஷாவின் பொதுக்கூட்டத்தில் கன்னடம் இல்லாமல் ஹிந்தியில் பதாகைகள் வைக்கப்பட்டன. இது கன்னடர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது, மராட்டியர்கள் அதிகம், வாழும் பகுதியில் சிவாஜி சிலை ஊர்வலமும், ஹிந்துத்துவா அமைப்பினர் பலமாக உள்ள பகுதியில் காவிக்கொடியுடன் ஊர்வலமும், நகர்புறங்களில் ஹிந்தியில் தேர்தல் பரப்புரைகளையும் பா.ஜ.க.வினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு கருநாடகாவில் உள்ள கன்னட அமைப்பினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ‘‘நாங்கள் மராட்டிய மாவீரனான சிவாஜியை மதிக்கிறோம் ஆனால் கருநாடகாவில் வட மேற்கு மாவட்டத்தில் வாழும் மராட்டிபேசும் மக்களின் வாக்குகளைப் பெற சிவாஜியைப் பயன்படுத்தினால் ஒட்டுமொத்த கருநாடக மக்களும் பா.ஜ.க.வை விரட்டியடிப்பார்கள்'' என்று அந்த அமைப்பு கூறியுள்ளது
No comments:
Post a Comment