இடுப்பு, வயிற்றைச் சுற்றி அளவுக்கு அதிகமான கொழுப்பு சேருவது, பல உடல் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். அதிலும் நடுத்தர வயதினர், உடல் பருமனுடன் இருப்பது, அடுத்த 10 ஆண்டுகளில் உடல் பலவீனமாகும் அபாயத்தை, மற்றவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரிக்கிறது.
இதனால், எதிர்பாராமல் கீழே விழுந்து எலும்புகள் உடைவது, பலவித உடல் கோளாறுகளால் அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டிய கட்டாயம், தினசரி வாழ்க்கையை இயல்பாக வாழ முடியாத நிலை என்று பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எல்லாவற்றையும் விட இப்படி மத்திய உடல் பருமன் உள்ளவர்கள், குறிப்பிட்ட வயதிற்கு முன்னரே மரணிப்பது தான் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம்.
No comments:
Post a Comment