பெங்களூரு, ஏப். 26- கருநாடக சட்ட சபைக்கு வருகிற 10-ஆம் தேதி தேர் தல் நடக்கிறது. இதற்கான பிரசா ரம் தொடங்கிவிட்டது. கரு நாடக சட்டசபை தேர்தல் பா.ஜனதா இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பா.ஜனதா தலைவரும், மேனாள் அள்.பி.எஸ். அதிகாரியுமான அண்ணா மலை செயல் பட்டு வருகிறார்.
இந்த நிலையில் கருநாடக காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் நாகராஜ் கவுடா, தேர்தல் ஆணையத்தின் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒரு கடிதம் வழங்கியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கருநாடக சட்ட சபை தேர்தல் பா.ஜனதா நட்சத்திர பேச்சாளராகவும், சட்டசபை தேர் தல் கருநாடக பா.ஜனதா இணை பொறுப்பாளராகவும் உள்ளார். அவர் கர்நாடகத்தில் முன்பு அய்.பி.எஸ். அதிகாரியாக பணி யாற்றி இருக்கிறார். பெங்களூரு நகர் உள்பட மாநிலத்தின் பல் வேறு மாவட்டங்களில் பல பொறுப்புகளில் அவர் பணியாற்றி உள்ளார். அவருக்கு கீழ் பணி யாற்றிய காவல்துறை அதிகாரிகள் பலர் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த செல்வாக்கை பயன்படுத்தி பா.ஜனதா வேட்பா ளர்கள் பயன் அடைய காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் அழுத்தம் கொடுக்கிறார். மேலும் அவர் தனக்கு முன்பு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி பா.ஜனதா பயன் அடைய முயற்சி மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.
மேலும் அவர் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு பணம் மற்றும் ஆட்களை மாநிலம் முழுவதும் அனுப்புவதாக தகவல் கிடைத்துள் ளது. மேனாள் காவல்துறை அதி காரி என்பதால் அவரது வாக னத்தை அதிகாரிகள் சோதனை நடத்துவது இல்லை. மேலும் காங்கிரசின் சில தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்த வைப்பேன் என்று மிரட் டுவதாகவும் தகவல் வந்துள்ளது. அவரின் செயல்பாடுகள் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதை பாதிக்கும் வகையில் உள்ளது. அதனால் கருநாடகத்தில் சட்டசபை தேர்தலை நியாயமா கவும், நேர்மையாகவும் நடத்து வதை உறுதி செய்ய அண்ணாமலை தேர்தல் பிரசாரம் செய்யவோ அல்லது கர்நாடகத்தில் தங்கவோ தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment