திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் வேற்று மதத்தினருக்கு வேலை!
பா.ஜ.க. மூத்த தலைவர் எதிர்ப்பு!
இப்படி ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
அப்படி என்றால், திருப்பதி தேவஸ்தான மருத்துவ மனையில் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு வைத் தியம் செய்யக்கூடாதா? திருப்பதி கோவில் தொடர் பான அனைத்துப் பணிகளிலும் மாற்று மதத்தினர் ஒருவர்கூட கிடையாதா? நகர சுத்திப் பணியாளர்கள் எல்லாம் அய்யர், அய்யங்கார் பார்ப்பனர்கள்தானா?
தண்ணீர்க் குழாய் பழுதானால் பார்ப்பனப் பணி யாளர்களைத் தேடி அலைவார்களா?
திருப்பதிக்கு மொட்டை அடிக்க வரும் பக்தர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான சான்றிதழ்களைப் பெற்றுத்தான் வரவேண்டுமா?
மத கிறுக்குத் தனத்திற்கு எல்லையே இல்லையா?
ஆமாம்! அது சரி, சிறீரங்கநாதர் கோவிலில் துலுக்க நாச்சியார் சன்னதி இருக்கிறதே, அதைப் பற்றிய நிலைப்பாடு என்ன?
மதம் யானைக்குப் பிடிக்கலாம், மனிதனுக்குப் பிடித்தால் இப்படிதான்!
No comments:
Post a Comment