வைக்கம் விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
திருவனந்தபுரம்,ஏப்.3- வைக்கம் சத்யா கிரக போராட்டம் போல் இன்றைய சவால்களையும் இணைந்து போராடி வெல்ல வேண்டும் என்று கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் பேசினார்.
வைக்கம் சத்தியாகிரக போராட்ட நூற்றாண்டு விழாவில் (1.4.2023) கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசிய தாவது:
தமிழ்நாட்டில் சட்டமன்றம் நடை பெறும் நேரமாக இருந்த போதிலும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தது வைக்கம் சத்யாகிரகப் போராட் டத்திற்கு அவரும், தமிழ்நாடு அரசும் கொடுக்கும் முக்கியத்துவம் தான் கார ணமாகும். அதற்காக நான் தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்னுடைய நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன். வைக்கம் சத்யாகிரகம் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த ஒரு போராட்டமாகும். அனைவரும் ஒன் றாக இணைந்து போராடினால் அதற்கு வலிமை அதிகம் என்பதை வைக்கம் சத்யாகிரக போராட்டம் உணர்த்துகிறது. இந்திய வரலாற்றில் இது ஒரு ஈடு இணை இல்லாத போராட்டமாகும். இது சமூக மாற்றங்களுடன், தேசியமும் இணைந்த ஒரு போராட்டமாகும்.
பெரியார் - அண்ணாவைப் பின்பற்றும் தமிழ்நாடு அரசு
சுதந்திரமாக நடமாடுவது என்பது ஒரு குடிமகனின் உரிமையாகும். ஆனால், இதைத் தடுக்கும் நிலை தான் நம்முடைய நாட்டில் அப்போது இருந் தது. அதனால்தான் இந்த நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வது மிக வும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரள மக்கள் ஒரே போராட்ட குணம் கொண்டவர்கள். சில வாரங்களுக்கு முன்புதான் தமிழ் நாட்டில் நடந்த தோள் சீலை போராட்ட நிகழ்வில் நாங்கள் ஒன்றாக கலந்து கொண்டோம். அங்கு வைத்துத் தான் வைக்கம் சத்யாகிரக நூற்றாண்டு விழாவை இணைந்து கொண்டாடலாம் என தீர்மானித்தோம். இணைந்து போராட வேண்டும் என்ற ஒரு எண் ணத்தை வைக்கம் சத்யாகிரக போராட் டம் வலியுறுத்துகிறது.
இனி அனைத்து விடயங்களிலும், இரு மாநிலங்களும் சகோதரத்துவத் துடன் செயல்படுவோம். இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்வோம்.
இரு மாநில அரசுகளும் சமூகநீதி யைப் பாதுகாப்பதுடன், தீண்டாமைக்கு எதிராகவும் செயல்படுகின்றன. தமிழ் நாடு அரசு பெரியார், அண்ணாவைப் பின்பற்றி செயல்படுகிறது. கேரளாவிலும் மதச் சார்பற்ற அரசு நடக்கிறது.
இன்று நாம் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் இதுபோல இணைந்து போராடி வெல்ல வேண்டும். வரும் காலத்திலும் இதுபோன்ற நிலை தொடர வேண்டும்.
-இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றினார்.
No comments:
Post a Comment