சுவீடனிலுள்ள கண்டு பிடிப்பு நிறுவனமான டுமாரோ இயந்திரலே, பழச்சாறு விற்கும் 'பிராம்ஹல்ட்ஸ்' நிறுவனமும் இணைந்து, ஒரு புதுமையை பரிசோதித்து வருகின்றன. பழச்சாற்றை பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்பதை தவிர்க்க, இரு நிறுவனங்களும் 'கான்ஷெல்ஸ்' என்ற புதிய பாட்டிலை உருவாக்கியுள்ளன.
உருளைக்கிழங்கை மாவாக ஆக்கி, அதில் செய்யப்பட்டது இந்த பாட்டில். இதில் அடைக்கப்பட்ட பழச்சாறைக் குடித்த பின், ஆரஞ்சு தோலை உரிப்பது போல, பாட்டிலை பிரித்து சாப்பிடலாம்; எருவாகப் பயன்படுத்தலாம் அல்லது நீரில் கரையவிட்டு, சாக்கடையில் ஓடவிடலாம். மொத்தத்தில் சுற்றுச்சூழலுக்கு எந்தக் கேடும் செய்யாது இந்த உருளை மாவிலான பாட்டில். 'பயோ பிளாஸ்டிக்' என்ற வகையைச் சேர்ந்த இந்த கண்டுபிடிப்பு மென் பானங்களை ஏந்தி விரைவில் வலம் வரக்கூடும்.
No comments:
Post a Comment