ஸ்டாக்ஹோம், ஏப். 27- 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் ராணுவக் கட்டமைப்புக்கான செலவு 81.5 பில்லியன் டாலராக (ரூ.6.68 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. உலக நாடுகள் தங்கள் ராணுவக் கட்டமைப்பை வலி மைப்படுத்தும் நடவடிக்கையில் இறங் கியுள்ளன.
இந்தியாவைப் பொறுத்த வரையில் 2020-க்குப் பிறகு சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந் துள்ளது. இதன் காரணமாக இந் தியா தனது ராணுவக் கட்ட மைப்பை வலுப்படுத்தி வருகிறது.
அந்த வகை யில் ராணுவத்துக்கு இந்தியா செலவி டும் நிதி 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடு கையில் 2022இல் 6 சதவீதம் அதிகரித் துள்ளது.
சீனா, பாகிஸ்தான் உடனான எல்லைப் பிரச்சினை தீவிரமடைந் துள்ள நிலையில் ராணுவத்துக்கான இந்தியாவின் ஒதுக்கீடு அதிகரித் துள்ளதாக ஸ்டாக்ஹோம் பன் னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறு வனம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்ட பட்டியலின் படி, ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலி டத்தில் உள் ளது. சென்ற ஆண்டில் அமெரிக்கா 877 பில்லியன் டாலர் (ரூ.72 லட்சம் கோடி) ராணு வத்துக்கு செலவிட்டுள்ளது.
2ஆம் இடத் தில் உள்ள சீனா 292 பில்லியன் டாலரும் (ரூ.24 லட்சம் கோடி) 3ஆம் இடத்தில் உள்ள ரஷ்யா 86.4 பில்லியன் டாலரும் (ரூ.7.06 லட்சம் கோடி) ராணுவத்துக்கு செலவிட்டுள்ளன.
No comments:
Post a Comment