கல்லுதானே!
* அயோத்தி ராமன் கோவில் கர்ப்பக் கிரகத்தில் 5 அடி கருங்கல் மூலவர் சிலை.
>> கடவுள் அல்ல - கல்லுதான் என்பதை இப்பொழுதாவது ஒப்புக்கொண்டால் சரி! மேலும் ராமன்தான் சிரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டு விட்டான் என்று ஒரிஜினல் வால்மீகி இராமாயணம் கூறிவிட்டதே!
ஒப்புக்கொள்கிறாரோ!
* உத்தரப்பிரதேசத்தில் தொழில் அதிபர்களை ரவுடிகள் யாரும் இனி மிரட்ட முடியாது - முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் பெருமிதம்.
>> ஆக, இதுவரை ரவுடிகள் தொழிலதிபர்களை மிரட்டிக் கொண்டிருந்தனர் என்பதை மறைமுகமாக சாமியார் முதலமைச்சர் ஒப்புக்கொள்கிறார், அப்படித்தானே!
பின்னணி என்ன?
* பா.ஜ.க. மற்ற மதங்களுக்கு எதிரானது என பொய்ப் பிரச்சாரத்தை கட்டமைக்கிறார்கள்.
- தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர்
அண்ணாமலை குற்றச்சாட்டு
>> குடியுரிமைச் சட்டம் என்பது என்ன? கருநாட காவில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததன் பின்னணி என்ன? பாபர் மசூதியை இடித்ததுதான் என்ன? என்ன?
No comments:
Post a Comment