- கேள்வி: கடவுள் இல்லை என்பவர்களைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை என்கிறாரே நடிகர் ரஜினிகாந்த்?
பதில்: கடவுளை நெருக்கத்தில் பார்த்துவிட்டுத் திரும்பியவர் அல்லவா! அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
‘குமுதம்', 26.4.2023, பக்கம் 18
ஓ, அப்படியா!
கடவுள் பொம்மையை எல்லோரும்தான் பார்க்கிறார்கள். அர்ச்சகர்கள் தொட்டுக் குளிப்பாட்டக் கூடச் செய்கிறார்கள்! (பெண் கடவுளுக்கும்கூட ஆண் அர்ச்சகர்கள்).
அந்தக் கடவுள் பேசியதாகவோ, சிரித்ததாகவோ, சாப்பிட்டதாகவோ யாரும் சொன்னதில்லையே!
கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்பதற்கு ரஜினியோ, குமுதமோ விளக்கம் கூறட்டுமே பார்க்கலாம்!
‘‘நட்டக் கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே, சுற்றிவந்து மொண மொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா?''
- சித்தர் சிவவாக்கியர்
No comments:
Post a Comment