ஒன்றிய அரசை கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் ஏப்ரல் 17ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
சென்னை, ஏப். 15தி.மு.க. இளைஞர் அணி செய லாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப் பினருமான எழிலரசன் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறி இருப்பதாவது:-
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ்வரும் ஒன்றிய பின்னிருப்புக் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்.) வெளியிட் டுள்ள வேலைவாய்ப்பு அறிவிக்கை யில், கணினி தேர்வு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித் துள்ளது மிகவும் கண்டனத்திற் குரியதாகும்.
ஹிந்தி பேசாத மாநில மக்களை புறக்கணித்து, ஹிந்தி மட்டுமே இந்தியா என கட்ட மைக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி வன்மை யாக கண்டிக்கிறது. தேர்வில் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை உணர்ந்த தி.மு.க. தலைவர் ஒன் றிய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஹிந்தி பேசாத மாநில இளை ஞர்களும் சம வாய்ப்பு பெறும் வகையில் தமிழ் .உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் கணினி தேர்வை நடத்த வழி செய்ய வேண்டும்.
இதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்தி தி.மு.க. இளைஞர்கள், மாண வர்கள் சார் பில் ஏப்.17ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவன் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment