16.4.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
👉முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று சிஆர்பிஎப் உட்பட அனைத்து ஆயுதப்படை காவலர் தேர்வையும் ஆங்கிலம், ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழ் உட்பட 13 மாநில மொழிகளிலும் நடத்துவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது
இந்தியன் எக்ஸ்பிரஸ்
👉சிபிஅய் முன்பு இன்று ஆஜராக உள்ள கெஜ்ரி வாலுடன் நேற்று காங்கிரஸ் தலைவர் கார்கே தொலை பேசியில் பேசியது பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. டில்லியில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட் சியை ஆம் ஆத்மி கைப்பற்றிய பிறகு முதல் முறையாக இரு கட்சிகளும் தற்போது நெருங்கி வந்துள்ளன. இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு முழு ஆதரவு அளிப்பதாக கார்கே அவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
👉 "ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே புல்வாமா தாக்குதலுக்கு காரணம். அதை கூறிய போது, பிரதமர் மோடி அமைதியாக இருக்கும்படி கூறினார். பின் தான் எனக்கு தெரிந்தது நடைபெற இருந்த 2019 மக்களவை தேர்தலில் ஒன்றிய அரசும், பாஜக.வும் பயனடைவதற்காக தாக்குதல் பழியை பாகிஸ்தான் மீது சுமத்தினார்கள்” என்று ஜம்மு-காஷ்மீர் மேனாள் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.
👉 டில்லி சட்டமன்றத்தில் ஜோதிடர்கள், டாரட் கார்டு வாசகர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் நேற்று கூடியிருந்தனர். டில்லி சட்டமன்ற செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு நபர் தனது எதிர்காலத்தை ஜோதிடத் தின் மூலம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்" என்று சட்டமன்ற தலைவர் கேட்டார். மேலும், ஜோதிட சாஸ்திரத் தில், ஜாதகத்தில் நடக்கும் பல வகையான தோஷங்கள் குறித்து பரிகாரங்கள் கூறப்பட்டு, ஒரு நபர் சிறப்பாக வாழ முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment