கோவை ஏப்.16 கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற முதலமைச் சர் புகைப்பட கண்காட்சியை அமைச் சர் வி.செந்தில் பாலாஜி பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் எனக்கு எதுவுமே கிடையாது எல்லாமே எனது நண்பர்கள் கொடுக்கின்றனர் என அண்ணாமலை தெரிவிக்கிறார், அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் 3.75 லட்சம் இதை யார் கொடுக்கின்றார்? ஒருமாதம் உதவி செய்யலாம், ஆண்டு முழுக்க யார் உதவி செய்வார்?. ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பணம் அனைத்தும் வெளியில் இருந்து வருகிறது என்றால், பணம் எங்கே வார் 'ரூம்மில்' இருந்து வருகின்றதா? 'வார் ரூமில் செய்யப்படும் வசூல்தான் அவரது நண்பரா?, யார் செலவு செய்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.
அண்ணாமலை தேர்தல் ஆணை யத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் சொந்த நிதியில் இருந்து பணம் எதுவும் செலவு செய்யவில்லை என்று தெரிவித்து இருக்கும் போது, அரவக்குறிச்சி தேர்தலில் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தது எப்படி என்று தெரி விக்கவில்லை.
அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் மாத வாடகை 3.75 லட்சம் இதை யார் கொடுக்கிறார், காருக்கு யார் டீசல், பெட்ரோல் பணம் கொடுக் கிறார்கள்? , மூன்று உதவியாளர்களுக்கு யார் ஊதியம் கொடுக்கிறார்?. 4 ஆட்டை மேய்த்தால் சென்னையில் 3.75 லட்சம் வாடகைக்கு வீட்டில் இருக்க முடியுமா?.தூய்மையாக இருக் கின்றீங்க என்றால் ஏன் அடுத்தவன் சொத்தில் வாழுறீங்க? தன்னை விட தனது மனைவி அதிகம் சம்பாதிப்பதாக அண்ணாமலை ஏற்கெனவே தெரிவித்திருக்கின்றார்,
உணவு பெட்ரோல், ஊதியம், வீடு, மூளை எல்லாமே அவருக்கு ஓசியாக இருக்கின்றது. அவர்கள் கட்சியில் எவ் வளவு உறுப்பினர்கள் இருக்கின்றனர், எவ்வளவு பூத் கமிட்டி அமைத்து இருக்கின்றனர், தேர்தலில் எதை செய்யப் போகின்றனர் என்பதை சிந் தித்து தேர்தல் பணி செய்ய வேண்டும்.
அதை விட்டுவிட்டு தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கும் சொத்து ஆவணங்களை தொகுத்து இன்று வெளியிட்டு இருக்கின்றார், என்னைபற்றியும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கின்றார், முதலமைச் சர் அனுமதி பெற்று நானே நீதிமன் றத்தில் அண்ணாமலை மீது வழக்கை தாக்கல் செய்ய இருக்கின்றேன். ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்யை சொல்கின்றார்” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
No comments:
Post a Comment