பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை! உச்சநீதிமன்றம் முக்கிய ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 19, 2023

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை! உச்சநீதிமன்றம் முக்கிய ஆணை

புதுடில்லி, ஏப்.19   பில்கிஸ் பானுவுக்கு இன்று நடந் தது நாளை வேறு ஒருவ ருக்கு நடக்கலாம் என குற்றவாளிகளை விடு வித்த வழக்கில் உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த  கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்ட துடன், அவரது குடும் பத்தினர் அவரது கண் முன்பாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டு தண்டனை அனுப வித்து வந்த 11 பேரையும் கடந்த ஆண்டு குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய் தது. இதை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத் தில் மேல் முறையீடு செய் யப்பட்டது. இதுதவிர மேலும் சிலர் பொதுநல மனு தாக்கல் செய் தனர்.இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாக ரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ததற்கான கார ணத்தை குஜராத் அரசு தெரிவிக்க வேண்டும். இது கொடும் குற்றம் தொடர்பான வழக்கு என் பதால் பொதுமக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு முடிவு செய் திருக்க வேண்டும். இன்று பில்கிஸ் பானு வழக் கில் நடந்தது நாளை வேறு ஒருவருக்கு நடக்கலாம். அது நீங்களாகவோ அல் லது நானாகவோ இருக்க லாம். குற்றவாளிகளின் விடுதலைக்கான கார ணத்தை தெரிவிக்கவில்லை என்றால், நாங்களே ஒரு முடிவுக்கு வருவோம்’’ என்றனர். இந்த வழக்கில், குற்றவாளிகளை விடுதலை செய்தது தொடர்பான அசல் கோப்புகளை தயா ராக வைத்துக்கொள்ளு மாறு கடந்த மார்ச் 27-ல் நீதிமன்றம் உத்தர விட் டது. இதை மறு பரிசீலனை செய் யுமாறு மனு தாக்கல் செய்ய உள்ளோம் என்று ஒன்றிய அரசும் குஜராத் அரசும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.


No comments:

Post a Comment