பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பி.கரிகாலன் தலைமை வகித்தார். தாம்பரம் மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் ப.முத்தையன், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தாம்ப ரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேசன் அனை வரையும் வரவேற்று, அறிமுக உரை ஆற்றினார். அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகக் கூறினார். பின்னர் இரா.சு.உத்ராபழனிசாமி உரையாற்றினார்.
“1929 - நாசிக்கில் நடைபெற்ற ஒடுக் கப்பட்டோர் மாநாடு குறித்தும் அதில் தந்தை பெரியாரின் கடிதத்தை அம் பேத்கர் படித்தது குறித்தும், அம்பேத் கரும், பெரியாரும் எவ்வாறு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட் டனர் என்பது குறித்தும் பேசினர். கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர் அண்ணா துரை உரையாற்றுகையில், மனித சமூ கம் எப்படி, இப்படி அடிமையாக்கப் பட்டது என்றும், பழைமையான மக்கள் தங்கள் தேவைக்காக கற்பனை செய்து வைத்திருந்த சொர்க்கம், நரகத் தைப் பற்றியும், அதனைப் பார்ப்பனர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டு மக் களை அடிமைப்படுத்தினர் என்பதை யும், அதற்காக எதிர்ப் போராட்டம் நடத்திய அம்பேத்கரின் அர்ப்பணிப்பு களையும் எடுத்துக் கூறினார்.
குணசேகரன் பேசும்போது, “தற்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை குறித்தும், இந்து மதத்தில் உள்ள இடர்ப்பாடுகளும், ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளால் இந்து மதத்தில் இருந்து மன வேதனையுடன், வெளியேறி அண்ணல் அம்பேத்கர் புத்தமதத்தை தழுவியதையும்“ விளக்கி உரை ஆற்றினார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட புதிய தோழர் பழனிசாமி பேசும் போது:-
நிர்மலா:- அம்பேத்கர் பெண்களுக்காக போராடியதையும், பெண்களுக்கு வாங்கிக் கொடுத்த முன்னுரிமைகளையும் குறிப்பிட்டுப் பேசினார்.
தாம்பரம் மாவட்ட தலைவர் முத் தையன்:- தன் வாழ்வில் பார்ப்பனர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும், தன் தந்தை அரசு வேலை செய்தாலும் பார்ப்பனரிடம் வேலை செய்யும் போதும், அந்த பார்ப்பனரின் குழந்தை கள் தன் தந்தையிடம் நடந்துகொண்ட முறையைக் கண்டு சிறு வயதிலேயே மனதில் ஏற்பட்ட வேதனை குறித்தும், அந்தக் காலகட்டத்தில் ‘விடுதலை’ பத்திரிகை மூலமாக பெரியாரின் கருத் துகளை தெரிந்துகொண்டு சுயமரி யாதை எவ்வளவு முக்கியம் என்று உரிமைகளை இழந்த காலகட்டத்தில் அம்பேத்கர் பட்ட பாடுகளையும் வேத னையோடு வெளிப்படுத்தினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் த
லைவர் பி.கரிகாலன் மற்றும் ஆவடி தமிழ்ச்செல்வன், கூடுவாஞ்சேரி மா.ராசு ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக நன்றியுரை ஆற்றிய தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அருணா பத்மாசூரன் லாகூர் மாநாடு குறித்தும், அம்பேத்கரின் மன உறுதியையும், அம்பேத்கர் இந்தக் காலகட்டத்திலும் போற்றப்பட வேண்டிய, தேவையான தலைவர் என்பது குறித்தும் பேசி, அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத் தினை நிறைவு செய்தார்.
கருப்பைய்யா மற்றும் கழகத் தோழர் கள் பலரும் இக்கலந்துரையாடல் கூட் டத்தில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment