வல்லம், ஏப். 30- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல் கலைக் கழகம்) உலக மரபு நாள் அல்லது உலகப் பாரம்பரிய நாள் (World Heritage Day) என்று அறியப்படும் நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான பன்னாட்டு நாள் ((International Day Geritage Day for Monuments and Sites) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 18 அன்று
கொண்டாடப்படுகிறது.
இந்நாளை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர் நிலைப்பல்கலைக்கழகத்தின் கட்டட எழிற்கலைத் துறையைச் சார்ந்த இளங்கலை மற்றும் முது கலை படிக்கும் 150 மாணவர் களுடன் 7 பேராசிரியர்களும் சேர்ந்து மதுரை வைகை நதி நாகரீ கத்தில் புதைந்து, தற்பொழுது அக ழாய்வின் மூலம் வெளிவந்திருக்கும் பண்டைய மேம்பட்ட நாகரீகத்தில் மக்கள் வாழ்ந்த - கீழடி நோக்கி ஒருநாள் தொல்லியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும் என்று கட்டட எழிற்கலை பேராசிரியர் ஜாஸ்மின் வித்யா கூறினார்.
இந்த கீழடி எனும் ஊர் மதுரையிலிருந்து 12 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள சிவகங்கை மாவட் டம் திருப்புவனம் அருகே அமைந் துள்ளது. இங்கு தொல்லியல் துறை பிரம்மாண்டான அருங் காட்சியம் ஒன்றினை ரூ.25 கோடி மதிப்பில் 6 காட்சி கூடங்களாகப் பிரித்து கட்டியிருக்கின்றது. இதனை 5.3.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். இந்த அருங் காட்சியகம் தமிழர்களின் ஆதி கால வாழ்க்கையைப் பற்றி இந்த காலத்துக்கு எடுத்துரைக்கும் வகை யில் அமைந்துள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் அகழாய்வில் கண்டெடுக்கப்பெற்ற செங்கல் கட்டுமானங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள், குறியீடுகள் பொறிந்த பானை ஓடுகள், கல் மணிகள், ஆட்டக்காய்கள், வெள்ளி முத்திரைக் காசுகள், கங்கை நாகரிகத்துடன் தொடர்புடைய கருப்பு வழுவழுப்பு பானைகள் உள்ளிட்ட பழங்கால பொருட் களை அதன் வரலாற்று சிறப்புடன் விவரித்து காட்சிக்கு வைத்திருந் தனர். இவற்றுடன் அகழாய்வு செய்த பகுதியில் கிடைத்துள்ள பண்டைய கட்டடங்களின் அடித் தளங்கள், உறை கிணறு, வடிகால் அமைப்பு என கட்டட எழிற்கலைத் துறை பற்றிய பல்வேறு கட்டுமான நுணுக்கங்களையும் மாணவர்கள் ஆர்வமாக கண்டு ரசித்தனர்.
மேலும் இங்கு உள்ள மினி திரையரங்கில் கீழடி குறித்த 15 நிமிடம் ஓடும் ஆவணப் படத் தையும் மாணவர்கள் ரசித்தனர். இந்நன்னாளில் பாரம்பரியம் மிக்க நம் வரலாற்றினை மக்கள் அனை வரும் அறிந்துகொள்ளும்படி மிகச்சிறப்பான முறையில் அருங்காட்சியகம் அமைந்திருக்கும் நம் தமிழ்நாடு அரசுக்கும், தொல்லி யல் துறைக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment