பட்டுக்கோட்டை, ஏப். 1- தந்தை பெரியார் அவர்களின் முதல் தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 73ஆவது நினை வேந்தல் வீரவணக்க பரப்புரை கூட்டம் 28.3.2023 அன்று பட்டுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
முதலாவதாக பட்டுக்கோட்டை பாளையத்தில் உள்ள அழகிரி மணி மண்டபத்தில் பட்டுக்கோட்டை கழக மாவட்ட தலைவர் அத்திவெட்டி வீரையன் தலைமையில், திராவிடர் கழக மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன் பழகன் மாலை அணிவித்து கழக மாவட்ட, ஒன்றிய, நகர கழகப் பொறுப் பாளர்கள் இளைஞர் அணி, மாணவர் கழகம், ஆசிரியர் அணி பொறுப்பா ளர்கள் புடை சூழ மரியாதை செலுத்தப் பட்டது. தொடர்ந்து பட்டுக்கோட்டை நகரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் சிலைக்கு மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவ ரும், மதுக்கூர் வடக்கு ஊராட்சி மன்ற தலைவருமான என்.கே.ஆர்.நாராய ணன் தலைமையில் திராவிடர் கழக மாவட்ட தொழிலாளர் அணி அமைப் பாளர் முத்து துரைராஜ் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பட்டுக் கோட்டை பெரிய கடை தெருவில் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 73ஆவது நினைவேந்தல் பிரச்சாரக் கூட்டம் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரைக்கு ஏற்ப மாவட்ட வழக்குரை ஞர் அணி தலைவர் அ.அண்ணாதுரை தலைமையிலும், நகரத் தலைவர் பொறி யாளர் சிற்பி கோட்டை வை.சேகர் வர வேற்புரையுடனும், மாவட்டக் கழகத் துணைத் தலைவர் முதுபெரும் பெரி யார் பெருந்தொண்டர் அ.காளிதாசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலை வர் ஆ.இரத்தின சபாபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வழக்குரைஞர் புலவஞ்சி இரா.காம ராஜ், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முத்து துரைராஜ், பட் டுக்கோட்டை ஒன்றிய கழக தலைவர் இரெ.வீரமணி ஆகியோர் முன்னிலை யில் மாவட்டத் தலைவர் அத்திவெட்டி பெ..வீரையன் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தொடர்ந்து கழக சொற்பொழி வாளர் சில்லத்தூர் வீர சிற்றரசுஉரை ஆற்றினார். நிறைவாக, மாநில கிராமப் புற பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களின் சிறப்பு இயல்புகளை எடுத்துரைத்து 75 நிமிடம் உரையாற்றினார். குறிப்பாக மேனாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் இவர்கள் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் பால் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடு களையும், டாக்டர் கலைஞர், அழகிரி அவர்களின் பேச்சே என்னை திரா விடர் இயக்கத்திற்கு இழுத்து வந்தது என்பதையும் கூறினார்.
காரைக்குடி கானாடுகாத்தான் பகுதியில் நாதஸ்வரம் வாசித்தவர் களுக்கு அந்த பகுதியைச் சேர்ந்தவர் களால் ஏற்படுத்தப்பட்ட இழுக்கை தனி ஒரு நபராக எழுந்து நின்று குரல் கொடுத்து அவர்களுக்கு உறுதுணை யாக இருந்ததையும், அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களுடைய பிரச்சார அணுகுமுறைப்படி காலையிலேயே பிரச்சாரம் நடைபெறும் ஊருக்கு சென்று தண்டோரா மூலம் கூட்டம் நடைபெறும் செய்தியை அறிவித்து, மாலையில் அவரே உரையாற்றுவது என்பது வரலாற்றில் எங்கும் காணப் படாதது என்பதனையும் மிகவும் தெள்ளத் தெளிவாக விளக்கி உரை யாற்றினார்.
கழக நகரச் செயலாளர் ஊடக வியலாளர் கா.தென்னவன் நன்றி கூறினார்.
பங்கேற்றோர்: பொதுக்குழு உறுப் பினர் பேராவூரணி இரா.நீலகண்டன், மாவட்ட இளைஞரணி தலைவர் அ.பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கா.தென் னரசு, மாவட்ட விவசாய அணி அமைப் பாளர் குறிச்சி பழ.வேதாசலம், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் எஸ்.நடராஜன், பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் வீ.வீரமணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் மா.சிவ ஞானம், பட்டுக்கோட்டை ஒன்றிய கழகச் செயலாளர் ஏனாதி ரெங்கசாமி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய கழக செயலாளர் ஆ.சண்முகவேல், மதுக்கூர் ஒன்றிய கழக துணை செயலாளர் சிவாஜி, பேராவூரணி ஒன்றிய கழக இளைஞரணி தலைவர் செங்கமங்கலம், செ.கவுதமன், வீரக்குறிச்சி டேனியல் ஆரோக்கியராஜ், பொதுவுடைமை இயக்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் பல்வேறு சமுதாய இயக்கங்களின் சார்பில் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங் கேற்று சிறப்பு செய்தனர்.
கூட்ட துவக்கத்தில் கழக சொற் பொழிவாளர்களுக்கு ரோஜா இராஜ சேகரன் வரலாறுகளை உருவாக்கக் கூடிய பேனாவை பரிசளித்து சிறப்பு செய்தார்.
நகர திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட கழக துணை செய லாளர் காளிதாசன் பயனடை போர்த்தி சிறப்பு செய்தார். கூட்டத்தை ஒட்டி பெரிய கடை தெரு பகுதியில் திராவிடர் கழக கொடிகள் நேர்த்தியாக கட்டப் பட்டிருந்தது.
கூட்ட மேடையில் தந்தை பெரியார் தமிழர் தலைவர் ஆசிரியர் அஞ்சாநெஞ்சன் அழகிரி இவர்களின் படம் வைக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment