27.4.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பன்னாட்டுக் கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வு களில் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் திருத்த விதி களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மோடி அரசு கொலை செய்கிறது. நிதியை குறைப்பதால், தொழிலாளர் களுக்கு பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* ஒன்றிய அரசின் அணுகுமுறைகள், வெளிப்படைத் தன்மை இல்லாமல் வளர்ந்து வருகிறது. பசு பாதுகாப்பு என தொடங்கி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலைகள் என அன்றாட வாழ்வில் அதிகரித்து வருகின்றன. அரச மைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு குறித்து தலையங்கம் கூறுகிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ரூ.2900 கோடி பணம் பெற்றுள்ள பிஎம்.கேர்ஸ், பணத்தை எப்படி செலவு செய்கிறது என எவருக்கும் தெரியாது என ராகுல் குற்றச்சாட்டு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment