தார்வார், ஏப்.18 நீங்கள் பாஜ்கவில் இருப்பதால் வீட்டில் உள்ளவர்களுக்கு வெளியே மரியாதை இல்லை. பாஜகவில் உங்களுக்கு உண்மையான மதிப்பு என்றுமே இருந்ததில்லை. ஆகவே அக்கட் சியை விட்டு வெளியே வாருங்கள் என்று பல ஆண்டுகளாக ஜெகதீஷ் ஷெட்டர் மனைவி கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை அடுத்து அவரை ஆனந்தக்கண்ணீரோடு வரவேற்றார் அவரது மனைவி.
கருநாடாக மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜெகதீஷ் ஷெட்டர். தற்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக இவரை உதாசீனப்படுத்தியதால் அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் பின்னர் அக்கட்சியிலிருந்து இருந்தும் விலகினார்.
பெங்களூருவுக்கு வந்து காங்கிரஸ் தலைவர்களுடன் அக்கட்சியில் இணைவது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு அவர் காங்கிரசில், அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார் ஜுன கார்கே முன்னிலையில் இணைந்தார்.
பின்னர் அவரை வரவேற்ற அவரது மனைவி ஷில்பா உணர்ச்சி பெருக்கில் அவரை கட்டிய ணைத்து கண்ணீர்விட்டார். பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றி குடும்பம் இனிமேல் தலைநிமிர்ந்து எங்கும் செல்லும் படி செய்துவிட்டீர்கள் என்று கூறினார். இதனால் ஜெகதீஷ் ஷெட்டரும் கண்ணீர் விட்டு அவரை ஆரத்தழுவினார். பின்னர் மனைவியை அவர் சமாதானப்படுத்தினார்.
ஜெகதீஷ் ஷெட்டர் கருநாடக முதலமைச்சராக இருந்த போது அவர் அரசியலில் புகழடைகிறார் என்ற உடன் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை கசியவிட்டு பதவி விலக சூழ்ச்சி செய்தது பாஜக, அடுத்த சில மாதங்களிலேயே அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபணமாகி மீண்டும் முதல மைச்சர் பதவியில் இருந்தார். ஆனால் பாஜக அவரை முதலமைச்சர் பதவியில் தொடரவிடாமல் செய்துவிட்டது, என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment