தருமபுரி, ஏப். 1-தருமபுரி மண்டல மகளிரணி செயலாளரும், தலைமையாசிரியருமான மு.இந் திரா காந்தி தாயாரும், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணனின் அவர்களின் மாமியாருமான திருமதி மு.சுப்பம் மாள் 29.-3.-2023 அன்று மாலை திருவண்ணாமலை மாவட் டம். செங்கம் அடுத்த ஆண்டிப் பட்டியில் மறைவுற்றார். அவர் இறுதி நிகழ்வு நேற்றைய முன்தினம் (30.3.2023) மதியம் 2 மணி அளவில் நடை பெற்றது.
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் த.அறிவரசன் தலைமையில் மறைவுற்ற அம்மையாரின் உட லுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப் பட்டது. இந்நிகழ்வில் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி, மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மத்தூர் ஒன்றிய தலைவர் கி.முருகேசன், ஒன்றிய செயலாளர் வே.திருமாறன், நகரத் தலைவர் சி. வெங்கடாசலம் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் விசுவ நாதன் வெங்கடேசன் ,ஜெயரட்ச கன் ,பிரியா, ஊற்றங்கரை ஒன்றிய தலைவர் செ.பொன்முடி, செயலாளர் செ.சிவராஜ் ஆகியோர் பங் கேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர்கள்
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன், மாவட்ட துணைத் தலைவர் தங்க.அசோகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர், சி. தமிழ்ச்செல்வன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், சோலையார்பேட்டை நகர அமைப்பாளர் ஆர்.ராஜேந் திரன், சுந்தரம்பள்ளி ஒன்றிய தலைவர் சி.சங்கர் மற்றும் தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்ட கழகத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment