தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் நேற்று (1.4.2023) கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் கேரள மாநில அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வைக்கம் சத்தியாகிரக போராட்ட நூற்றாண்டு விழாவிற்கான இலச்சினையை வெளியிட்டார். இவ்விழாவில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், கேரள மாநில அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் டி.ஆர். பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர்
கே. பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில கவுன்சில் செயலாளர் கானம் ராஜேந்திரன், மதச்சார்பற்ற தேசிய திராவிட கட்சியின் பொதுச்செயலாளர் வெள்ளபள்ளி நடேசன், கேரள புலையர் மகா சபையின் பொதுச்செயலாளர் புன்னால சிறீகுமார், கேரள மாநில தலைமைச் செயலாளர்வி.பி. ஜாய், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment