ஆளுநர் இன்றும் அய்பிஎஸ் அதிகாரி என்ற மனநிலையில் இருக்கிறார் : நீதிபதி சந்துரு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 24, 2023

ஆளுநர் இன்றும் அய்பிஎஸ் அதிகாரி என்ற மனநிலையில் இருக்கிறார் : நீதிபதி சந்துரு

புதுச்சேரி, ஏப். 24  புதுச் சேரியில் மணற்கேணி ஆய்வெளி இலக்கிய அமைப்பு சார்பில்  சிறப்பு கருத் தரங்கம் நடைபெற் றது. “கேசவானந்த பாரதி தீர்ப்பும் அரசமைப்பு சட்டத்தின் பாதுகாப்பும்" என்ற தலைப்பில் நீதிபதி சந்துரு பேசுகையில், தான் இன்னும் அய்.பி.எஸ் என்று தமிழ்நாடு ஆளுநர் நினைத்துக் கொண்டிருக் கிறார். ஆளுநரை கண் டித்து தீர்மானம் இயற் றும் சட்டமன்றத்தை தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் ஆளுநரை வைத்து ஆட்சியை எப்படி கவிழ்க்கலாம் என திட்டமிட்டுக் கொண்டி ருக்கிறார்கள்.  ஆளுநர்கள் மூலம் மாநில அரசின் உறுதித் தன்மையை அசைக்கும்  வகையில் ஒன்றிய அரசு செயல்படு கிறது. இதனால் நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உருவாகி வரு கிறது. நீதிபதிகள் செல்லக்கூடிய போக்கு 2 வழிகளில் உள்ளது. அரசமைப்பு சட்டத்தில் உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதனை நம் பாமல் சிலர் அந்த அரியணையில் அமர்ந்திருக் கிறார்கள்.  துறவிகள் மாநாட்டில் வேதங்கள் ஓதுவார்கள் என எதிர்பார்த்தேன் ஆனால் புதிய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். பள்ளிப் பாடத் திட்டத்தில் வர லாற்றை திருத்தி எழுது கிறார்கள். இந்திய அரச மைப்பு சட்டத்தை மாற்று வதற்கு யாருக்கும் அதி காரம் இல்லை.  அரசிய லமைப்பு சட்டத்தின் அடிப்படை  கட்ட மைப்பை மாற்ற நாடாளு மன்றத்திற்கும் அதிகாரம் இல்லை. நாட்டின் ஜன நாயக கட்டமைப்பை ஒரு போதும் மாற்ற அனும திக்க மாட்டோம் என் றார். மோடியை விமர் சனம் செய்யும் யாரும் நீதிபதியாக அமர முடி யாது என்ற நிலை உரு வாகியுள்ளது. உளவு  அமைப்புகளை நம்பாமல் தற்போது  அனைத்து சமூக  வலை தளங்களையும் ஒன்றிய அரசு கண் காணித்து வருகிறது என்று சந்துரு கூறினார்.


No comments:

Post a Comment