கோவை மண்டல கழக செயலாளர் ச.சிற்றரசு மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 18, 2023

கோவை மண்டல கழக செயலாளர் ச.சிற்றரசு மறைவு

கழக மகளிரணியினரே உடலை சுமந்து சென்று இறுதி மரியாதை

கோவை, ஏப். 18- கோவை மண்டல கழக செயலாளர் ச.சிற்றரசு  மறைவுக்கு கழக மகளிரணியினர், கழகத்தோழர்கள் திரண்டு மரியாதைசெலுத்தினர். 

மறைந்த மண்டல செயலாளர் ச.சிற்றரசுவின் உடலுக்கு கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் மரியாதை செலுத்தினார்.

கோவை மண்டல செயலாளராக பொறுப்பேற்று கழக வளர்ச்சிக்கு தனது உழைப்பை விரிவடைய செய்து மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர் தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள எண்ணற்ற இளைஞர்களை ஈர்க்க தொடங்கி அவர்களின் கொள்கை உணர்வை கூர்தீட்டும் தமிழர் தலைவர் அவர்களின் போர்ப்படை தளபதிகளில் ஒருவ ராக விளங்கியவர். கோவை மண்ட லத்தில் உள்ள அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களின் ஆதரவை யும் அனைத்து கழக தோழர்களின் அன்பையும், அனைத்து தோழமை கட்சியின் ஆதரவைப் பெற்றவர்.

அவருடைய மறைவு திராவிடர் கழகத்திற்கும் கழகத் தோழர்களுக்கும் மிகப்பெரிய பெரிய இழப்பு ஆகும்.

மறைந்த சிற்றரசுவுக்கு கழக மகளிரணி சார்பில் மரியாதை செலுத்தும் விதமாக பொதுக்குழு உறுப்பினர் ச.திலகமணி, மாவட்ட மகளிரணி தலைவர் கவிதா, மாவட்ட மகளிரணி தேவிகா, மாவட்ட கழக மகளிரணி நாகமணி, ஜோதிமணி, செ.கவுசல்யா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மகளிரணியினரே முன்வந்து உடலை தூக்கி சுமந்து வந்து வாகனத்தில் வைத்து தங்கள் மரியாதை செலுத்தினர்.

கோவை மாவட்ட காப்பாளர் ம.சந்திரசேகர், மாவட்ட தலைவர் திக செந்தில்நாதன், மாவட்ட செயலாளர் க.வீரமணி, மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், மாணவர் கழக துணை செயலாளர் மு.ராகுல், மகளிரணி மண்டல செயலாளர் கலைச்செல்வி, மாநில வழக்குரைஞர் பொறுப்பாளர் ஆ.பாண்டியன், மற்றும் கழக பொறுப்பாளர்கள் இளைஞரணி மாணவர் கழக தோழர்கள் உறவினர்கள் ஏராளமானோர் வருகை தந்து மரியாதை செலுத்தினர்.

கோவை மண்டலத்தில் உள்ள மேட்டுப்பாளையம் கழக மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, பொள் ளாச்சி மாவட்ட பொறுப்பாளர் கள் சி.மாரிமுத்து, ரவிச்சந்திரன், தாராபுரம் மாவட்ட பொறுப் பாளர்கள் கிருஷ்ணன், தம்பி பிரபாகரன், திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் குமரவேல், கோபி கழக மாவட்ட பொறுப் பாளர் வழக்குரைஞர் சென்னியப் பன், உள்ளிட்ட கோவை மண்டல மாவட்ட திராவிடர் கழக பொறுப் பாளர்கள் மரியாதை செலுத்தினர்.

கோவை கு.இராமகிருஷ்ணன் தலைமையில் பன்னீர்செல்வம், ஜீவானந்தம்,இராமச்சந்திரன், நேருதாஸ், நிர்மல்குமார் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள், கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் உதயகுமார், உள்ளிட்ட ஏராளமான திமுக தோழர்கள், குறிச்சி சிவா உள்ளிட்ட அதிமுக தோழர்கள், வழக்குரைஞர் வெண்மணி, களப்பிரர் உள்ளிட்டோர்,  மற்றும் அந்தோணி அன்பரசு, பாபு, மற்றும் வே. ஈஸ்வரன், உள்ளிட்ட தோழமை கட்சியின் பொறுப்பாளர்கள் பலரும் இறுதி  மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment