சனாதன சக்திகளை வீழ்த்திட ஜனநாயக சக்திகளே ஒன்றிணைவீர்! எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 15, 2023

சனாதன சக்திகளை வீழ்த்திட ஜனநாயக சக்திகளே ஒன்றிணைவீர்! எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்

சென்னை, ஏப் .15-- வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க விடு தலை சிறுத்தைகள் கட்சி முயற்சி களை மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார். 

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, 'ஜனநாயகம் காப் போம்' என்ற கருத்து முன்வைக் கப்பட்ட பேரணி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. எழும் பூர் ராஜரத்தினம் அரங்கம் அரு கில் இப்பேரணியை, கட்சித் தலை வர் திருமாவளவன் தொடங்கி வைத்தார். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப் போது, ஒன்றிய அரசைக் கண் டித்து முழக்கங்கள் எழுப்பப்பட் டன. தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோர், ஒன்றிய அரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், அலங் கரிக்கப்பட்ட வாகனங்களும் பங் கேற்றன. ஏறத்தாழ 1.5 கி.மீ. தொலைவு நடைபெற்ற பேரணி, எல்.ஜி. சாலை சந்திப்பில் நிறை வடைந்தது. அங்கு, திருமாவளவன் எம்.பி. தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அம்பேத்கருக்கு அங்கீகாரம்:

தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமாவள வன் பேசியதாவது: உலகிலேயே மிக உயரமான அம்பேத்கர் சிலையை நிறுவியதற்காக தெலங் கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனமார்ந்த நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல, தமிழ்நாட்டிலும் அம்பேத்கருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறோம். அம்பேத்கருக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் என்று, மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது. அம்பேத்கரைப் புறந்தள்ளிவிட்டு இனி அரசியல் செய்ய முடியாது என்ற சூழல் நிலவுவது மகிழ்ச்சிஅளிக்கிறது. அம்பேத்கரை ஜாதித் தலைவர் என்று சில மூடர்கள்தான் ஒதுக் குகின்றனர். அவர் வகுத்த அரச மைப்புச் சட்டத்தில் இருக்கும் மதச்சார்பின்மை என்ற சொல், பாஜகவுக்கு எரிச்சல் ஊட்டுகிறது.

ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டு:

இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருந்த ஓபிசி தலைவர்களுடன், அதை எதிர்க்கும் வலதுசாரிகள் கூச்சமின்றி கூட்டணி வைத்துள் ளனர். பெண்களுக்கு பிற மதத்தில் இருக்கும் சுதந்திரம்,  ஹிந்து மதத்தில் கிடையாது. பிற மதத்தில் இருப்பவர்களிடம் இருந்து ஹிந்து மதத்தினரைப் பிரிக்கவே, வகுப்புவாதம், பெரும்பான்மை வாதம் போன்றவற்றை பாஜக முன்வைக்கிறது. ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்துவத்தை மறந்து, சனாதன சக்திகளுக்காகவும், கார்ப் பரேட் நிறுவனங்களுக்காகவும் செயல்படுகிறது. ஜனநாயகம் இல் லைஎன்றால் அரசமைப்புச் சட் டம் இல்லை.

எனவே, ஜனநாயகத்தைப் பாது காக்க உறுதியேற்போம். வரும் மக்களவைத் தேர்தலில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க விடு தலை சிறுத்தைகள் கட்சி உரிய முயற்சிகளை முன்னெடுக்கும். இதற்கு தொண்டர்கள் எப்போதும் போல உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு திருமாவள வன் பேசினார். இதில், சட்டப் பேரவை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.பன் னீர்தாஸ், மகளிரணிச் செயலாளர் இரா.நற்சோனை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment