சொத்துச் சேர்ப்பது மூடநம்பிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

சொத்துச் சேர்ப்பது மூடநம்பிக்கை

ஏற்றத்தாழ்வு மலிந்த இந்தச் சமூக அமைப்பு ஏற்பாட்டால் யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ அமைதியோ ஏற்பட முடியுமா? இருப்பவன் அதோடு திருப்தி அடையாது மேலும் மேலும் பணக்காரனாக வேண்டும் என்று கருதுகிறான். இந்த மனப்பான்மைக்குக் காரணம் என்னவென்றால், கஷ்டப்பட்டு உழைக்காது சுகவாழ்வு நடத்துவதும் தேவைக்கு மேற்பட்ட சொத்துகளுக்குச் சொந்தக்காரனாக இருப்பதும் ஒரு கவுரவம் என்றும், தனி மதிப்புக்குரிய பாத்திரமானது என்றும் கருதுகின்ற ஒரு மூடநம்பிக்கையே தவிர வேறில்லை.   

'விடுதலை' 8.10.1973

 

No comments:

Post a Comment