"நம்முடைய தோழர்கள் எல்லாம் நகர மன்றத்திலே நுழைகிற நேரத்தில், உச்சியிலிருந்து பாதம் வரையில் தொங்கக் கூடிய நல்லதோர் மலர் மாலையைத் தயாரித்து, நகர சபைக் கட்டடத்திற்கு எதிரிலேயே கவனிப்பாரற்று நிற்கின்ற - தமிழர்களைக் கை தூக்கிவிட்ட சர் தியாகராயர் சிலைக்கு அணிவித்து, அவரது பொன்னடிகளைத் தொழ வேண்டும். "மகானே! நீங்கள்தான் தமிழர் சமுதாயத் திற்கு முதன் முதல் அறிவூட்டினீர்கள்; வாழும் மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்தீர்கள்; உங்களது வழிவந்த நாங்கள், நீங்கள் பட்ட தொல்லைகளைவிட அதிகமாக அவதிப் பட்டோம். நீங்களாவது செல்வச்சீமான்; நாங்கள் பஞ்சைப் பராரிகள்! ஆனால் சீமான்கள் உங்களை மதிக்க மறந்தார்கள்; ஏழைகளாகிய நாங்கள் உங்களை மறக்கவில்லை!" - என்று வீர வணக்கம் செலுத்தி விட்டு உள்ளே நுழைந்து கடமையாற்ற வேண்டுகிறேன்"
அறிஞர் அண்ணா அவர்கள் 1959ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.கழகம் பெரு வெற்றி பெற்றபோது கூறியது....
No comments:
Post a Comment