புகார்களை...
பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை தெரிவித்திட கட்டணமில்லா தொலைபேசி எண் 18004252152-யை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அடையாளம்
கொள்கை விதிகளுக்கு மாறாக பதிவிடப்படும் டிவிட் பதிவுகளை அடையாளம் காட்ட லேபிள்களை சேர்க்க ட்விட்டர் நிறுவனம் முடிவு.
பதவி உயர்வு
மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி (பணி மூப்பு) முறையில் பதவி உயர்வு வழங்குவதை அடுத்த மூன்று மாதத்தில் செய்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
விருது
தமிழ்நாட்டை சேர்ந்த 14 அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை விபத்து ஏற்படாமல் தங்களது பணியை மேற்கொண்டதற்காக டில்லி கான்ஸ்டியூஷன் மன்றத்தில் நடைபெற்ற விழாவில் "ஹீரோஸ் ஆன் தி ரோடு" என்ற பெயரில் ஒன்றிய அரசு விருது வழங்கியது.
தவிர்க்க...
வெயில் காரணமாக பாதிக்கப்படுவதை தவிர்க்க ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதி யுள்ளது.
ரத்து
அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வார நாள்களில் வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகை வருகிற ஜூன் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரவு
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனுக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
தடுக்க...
தமிழ்நாடு முழுவதும் கோடை காலத்தில் ஏற்படும் தீ விபத்தை கட்டுப்படுத்தும் வகையில் வனப்பகுதியில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 25 பேர் இடம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment