தமிழர் தலைவர் ஆசிரியரின் மே நாள் வாழ்த்து!
நாளும் உழைத்து புது உலகம் காண்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மே நாள் வாழ்த்து அறிக்கை விடுத்துள்ளார்.
நாளை (மே முதல் நாள்) - மேதினியெங்கும் மே நாள் கொண்டாட்டம் குதூகலமாய்க் கொண்டாடப்படும் நாளில், அதனை இங்கு பற்ற இருந்த ‘கிரகணம்' - தொழிலாளர்கள், முற்போக்காளர்களின் கட்டுப்பாடான எழுச்சியாலும், மக்களின் குரலுக்கு செவி சாய்த்து செயல்படும் ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் அரிய சாதுரியத்தாலும் மே நாள் கொண்டாட்டமாக ஆகி உள்ளது இவ்வாண்டு!
வாழ்த்தி மகிழ்கிறோம்!
‘‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்;
அவன் காணத் தகுந்தது வறுமையாம் - அவன்
பூணத் தகுந்ததும் பொறுமையாம்''
என்ற நிலை மாறிட, நாளும் உழைத்து புது உலகம் காண்போம்!
அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.4.2023
No comments:
Post a Comment