திருவொற்றியூரில் அரசு கல்லூரிக்கு சொந்த கட்டடம் அமைச்சர் க.பொன்முடி உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 15, 2023

திருவொற்றியூரில் அரசு கல்லூரிக்கு சொந்த கட்டடம் அமைச்சர் க.பொன்முடி உறுதி

சென்னை,ஏப்.15- திருவொற்றியூரில் அமைந்துள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டடம் வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கோரியதைத் தொடர்ந்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அக்கோரிக்கையின்மீது பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திருவொற் றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் (திமுக) பேசியதாவது: திருவொற்றியூரில் 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில், கலைஞர் ஆட்சி யின் போது, கலை மற்றும் அறிவியல் கல்லூரி வந்தது. பின்னர், ஆட்சி நிறைவுபெற்ற காரணத்தால், அந்த கலை அறிவியல் கல்லூரி, ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய பள்ளியில் இயங்கி வருகிறது. தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள், அந்த கல்லூ ரிக்கு கட்டடம் கட்டித் தரவில்லை. அங்கு அடிப்படை வசதிக ளும் இல்லை. மழை பெய்தால்கூட, அந்தக் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்க வேண்டிய நிலை இருக்கிறது. எனவே இந்த கல்லூரிக்கு சொந்தமாக கட்டடத்தை கட்டித் தர வேண் டும், என்றார். 

அமைச்சர் க.பொன்முடி: கல்லூரிகளில் உட்கட்ட மைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டுமென்ற எண்ணத் தோடுதான் முதலமைச்சர் நிதி ஒதுக்கியிருக்கிறார். எந் தெந்த கல்லூரிக ளுக்கு அவசியமாக தேவைப்படுகிறதோ, அந்த கல்லூரிக ளுக்கெல்லாம் கட்டடங்களை கட்டுவதற் கான ஏற்பாடு களைச் செய்து கொண்டிருக்கிறோம். நிச்சய மாக உங்களுடைய கோரிக்கையும் பரிசீலிக்கப்படும்,’ என்றார்.

No comments:

Post a Comment