[27-03-2023 நாளிட்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழ் கட்டுரையின் தமிழாக்கம்]
ப்பி.டி.ட்டி. ஆச்சாரி
காங்கிரஸ் தலைவரும், மேனாள் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்திக்கு சூரத் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 23ஆம் தேதி சிறைத் தண்டனை அளித்ததைத் தொடர்ந்து மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப் பட்டதும், மிகமிக முக்கியமான சில அரசமைப்பு சட்டம் மற்றும் இதர சட்டங்களைப் பற்றிய கேள் விகளை எழுப்பியுள்ளன. அவதூறு வழக்கில் அளிக்கப்பட்ட இந்த தண்டனையில் உள்ள முன் எப்போதும் இல்லாத கடுமை சட்ட சமூகத்தையே குழப்பமும், திகைப்பும் அடையச் செய்துள்ளது. எப் படியும் இந்த பிரச்சினை மேல் முறையீட்டு நீதிமன் றங்களால் கையாளப்படப் போகிறது. ஆனால் அவரது மக்களவை உறுப்பினர் தகுதி நீக்கம் மிகமிக கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான பல்வேறு குற்றங்களை 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8 குறிப்பிட்டு உள்ளது. அதன் பிரிவு 3 இல், மற்ற இரண்டு பிரிவுகளின் கீழான குற்றம் தவிர இதர வழக்குகளில் எந்த ஒரு குற்றத்திற்காவது இரண்டு ஆண்டுகளுக்கும் குறையாத அளவு சிறைத் தண்டனை அளிக்கப்பட்ட நாள் முதல் அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்று கூறுகிறது. ஆனால், மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக அந்த தண்டனை மூன்று மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று பதவியில் உள்ள உறுப்பினர்களுக்கு இச்சட்டத்தின் பிரிவு 4 தவிர்ப்பு அளித்துள்ளது. அத்தகைய தவிர்ப்பு ஒன்றைப் பற்றி சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதாலும், அரசமைப்பு சட்டத்திற்கு அது எதிராக இருப்பதாலும் அந்தப் பிரிவு செல்லாது என்று இரு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு ஒன்று லில்லி தாமசுக்கும் இந்திய ஒன்றிய அரசுக்கும் இடையேயான வழக்கில் ரத்து செய்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பின் பாதிப்பு என்னவென்றால், பதவியில் உள்ள சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் தகுதி நீக்கம் செய்யப் பட்டால், அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப் படுவார் என்பதுதான். எவ்வாறாயினும், மேல் முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்தால், இந்த பதவி நீக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டு, அவரது உறுப்பினர் பதவி அவருக்கு திரும்பவும் அளிக்கப்படும் என் பதை நீதிமன்றம் தெளிவாக ஆக்கியுள்ளது.
குடியரசு தலைவரின் பங்கு
இவ்வாறு பதவி நீக்கம் செய்வதற்கான மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 8 (3) பற்றி பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற விளக்கங்கள் அளிக்கப் பட்டுள்ளன. இந்த சட்டப் பிரிவை மேலோட்டமாக பார்த்தால், விசாரணை நீதிமன்றம் சிறைத் தண் டனையை அறிவித்த அந்தக் கணமே, அந்த உறுப் பினர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் என்று தோன்றும். இப்பதவி நீக்கத்தினால் சட்ட மன்றத்தில் அந்த உறுப்பினரின் இடம் - பிரிவு 101)(3) (ஏ) யின்படி காலியாக ஆகிவிடும். ஆனால் அதனை நெருக்கமாக படித்துப் பார்த்தால், “தகுதி நீக்கம் செய்யப்படுவார்” என்று அதில் கூறப்பட்டுள்ள “பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படும்” எனும் உடனடி பதவி நீக்கம் என்ற பொருள் தருவதற்கு இடமில்லை. இவ்வாறு “பதவி நீக்கம் செய்யப்பட்ட தாகக் கருதப்படும்” என்ற சொற்கள் இந்தப் பிரிவில் பயன்படுத்தப்பட்டிருந்தால், வேறு எந்த மேல் முறை யீட்டு அதிகாரத்தின் குறுக்கீடு எதுவுமின்றி, உட னடியாக தகுதி நீக்கம் என்ற பொருளை அது நிச்சயமாகத் தரும்.
நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் என்று அறிவிப்பதற்கு நாடாளுமன்ற பொதுச் செய லாளருக்கோ ஒரு மாநில சட்டமன்ற செயலாளருக்கோ அதிகாரம் இல்லை. 1951 ம.பி.சட்டத்தின் பிரிவு 8 (3) படி அது குடியரசு தலைவருக்குத்தான் உள்ளது
இந்தப் பிரிவில் பயன்படுத்தப்பட்டுள்ள செயப் பாட்டு வினை, அந்த உறுப்பினர் வேறு ஒரு அதிகார அமைப்பினால் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்ற மறைபொருளையே தருகிறது. அந்த அதிகார அமைப்பு எதுவாக இருக்கும்? நாடாளுமன்ற அவை பொதுச் செயலாளராகவோ அல்லது மாநில சட்ட மன்ற பேரவைத் தலைவராகவோ அது இருக்க முடியாது. அதன் காரணமே பதவியில் உள்ள சட்ட மன்ற உறுப்பினருக்கு அளிக்கப்பட்டுள்ள தவிர்ப்பு தான். தற்போது பதவியில் உள்ள உறுப்பினர்கள் சார்பாக 103 ஆவது பிரிவே ஒரு தவிர்ப்பை அளித் துள்ளது. தற்போது பதவியில் உள்ள உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வது குடியரசு தலைவரால் முடிவு செய்யப்படும் என்று அது கூறுகிறது. இவ்வாறு ஒரு வேட்பாளருக்கும் தற்போது பதவியில் உள்ள உறுப் பினருக்கும் இடையேயான வேறுபாட்டை அரச மைப்பு சட்டமே செய்திருக்கிறது. இது நீதிமன்றத்தாலும் அதன் தீர்ப்பிலும் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப் பட்டு, தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்காக தற்போது பதவியில் இருக்கும் உறுப் பினர்களுக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கும் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தற்காலிக தவிர்ப்பு அளிப்பது ஒரு நியாயமான தேவையே ஆகும். வேட்பாளர்கள் வைக்கப்படும் அதே நிலையில் அவர்களை வைத்துப் பார்க்கமுடியாது. அவர்களுக்கு அது போன்ற அதிகாரத்தை அரசமைப்பு சட்டம் தந்து இருக்கவில்லை. 1951 ம.பி.சட்ட 102(1) (ஈ) உபபிரிவின் கீழ் வரும் தற்போது பதவியில் இருக்கும் உறுப்பினர்களின் தகுதிநீக்க வழக்குகள் அனைத்திலும், அது பற்றி முடிவு செய்யும் அதிகாரம், அதன் 8 (3) பிரிவின் கீழ் வரும், சிறைத் தண்டனை அளிக்கப் பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்படுவது உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலும, இந்திய குடியரசு தலை வருக்கு மட்டுமே முடிவெடுக்கும் உரிமை உள்ள தென்று 103 ஆவது பிரிவு எடுத்துக் காட்டுகிறது.
இந்த 103 ஆவது சட்டப்பிரிவு பற்றி பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. 102 (1) சட்டப் பிரிவின் கீழ் வரும் ஏதாவது ஒரு பதவியில் உள்ள உறுப்பினரை தகுதி நீக்கம் செய்வது பற்றி எந்தக் கேள்வியாவது எழுந்தால், அந்தக் கேள்வி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அவரது முடிவே இறுதியானது என்றும் இந்த 103 ஆவது சட்டப்பிரிவு கூறுகிறது. பதவி நீக்கம் செய்வது பற்றி மட்டுமே ஒரு வழக்கு எழும் போது மட்டுமே இந்த சட்டப் பிரிவு பயன்படுத்தப்பட இயலும் என்று இந்தப் பிரிவு கூறுவதாகவும், வேறு விடயங்களில் பயன்படுத்த இயலாது என்றும் ஒரு கண்ணோட்டம் நிலவுகிறது. 1951 ம.பி. சட்ட 8 ஆவது பிரிவின் கீழ்வரும் பல் வேறுபட்ட குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதால் தகுதி நீக்கம் செய்யும் வழக்குகளைப் பற்றியே இந்த பிரிவு கையாள்கிறது. அப்படி இருக்கும்போது வழக்குகள் பற்றி கேள்விகள் எங்கிருந்து எழும்? பிரிவு 8இல் வரும் குற்றங் களுக்காக சிறைத் தண்டனை பெற்று தற்போது பதவியில் உள்ள உறுப்பினரை பதவி நீக்கம் செய்யும் கேள்வி குடியரசுத் தலைவரின் முடிவுக்கு அனுப்பப் பட வேண்டும் என்பது ஓர் அரசமைப்பு சட்ட தேவை என்ற பொருளையே இது தரும். நுகர்வோர் கல்வி, ஆராய்ச்சி சங்கத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே 2009இல் நடைபெற்ற ஒரு வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் இந்த நிலைப்பாட்டை நிலை நாட்டியுள்ளது. இங்கு குடியரசு தலைவர் சமரசம் செய்து வைப்பது மற்றும் அறிவிப்பது ஆகிய இரண்டு செயல்பாடுகளையும் ஆற்றுகிறார் என்று அந்தத் தீர்ப்பு கூறுகிறது.
சமசரம் செய்து வைக்கத் தேவை இல்லாத வழக்குகளில், தற்போது பதவியில் உள்ள உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிய ஒருவராக ஆகி விட்டார் என்று குடியரசு தலைவர் சாதாரணமாக அறிவித்து விடலாம். பதவியில் இருக்கும் உறுப்பினர் ஒருவர் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதால், பதவி நீக்கம் செய்யப்படும் வழக்குகளிலும், அந்தத் தண் டனை அளிக்கப்பட்ட அந்தக் கணமே பதவி நீக்கம் நடைமுறைக்கு வந்து விடுகிறது என்று இந்த சட்ட 8 (3) ஆவது பிரிவு கூறவில்லை. “தகுதி நீக்கம் செய் யப்படுவார்” என்ற சொற்கள் அந்த அர்த்தத்தையே அளிப்பதாகும்.
லில்லி தாமஸ் வழக்கின் தீர்ப்பில் சில குறிப்பிட்ட தவறுகள் உள்ளன. தற்போது பதவியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக ஒரு தற் காலிக அரசமைப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தால் உருவாக்க முடியாது என்று அது கூறுகிறது. ஆனால், தற்போது பதவியில் உள்ள உறுப்பினர்களின் தகுதி நீக்கம் குடியரசுத் தலைவரால் முடிவு செய்யப்படும் என்று ஒரு தவிர்ப்பை சட்டப்பிரிவு 103 அளித் திருக்கிறது. இவ்வாறு வேட்பாளர்களுக்கும், தற் போது பதவியில் உள்ள உறுப்பினர்களுக்கும் இடையே ஒரு வேறுபாட்டை அரசமைப்பு சட்டமே செய்து காட்டியுள்ளது. இது இந்த நீதி மன்றத்தாலும் அதன் தீர்ப்பாலும் கவனிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப் பட்டு புறந்தள்ளப்பட்டுள்ளது. தங்களது சிறைத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தற்போது பதவியில் உள்ள உறுப்பினர் களுக்கு மூன்று மாத கால அவகாசம் அளிக்கப் பட்டதையும் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.
தற்போது பதவியில் உள்ள உறுப்பினரை தகுதி நீக்கம் செய்யும் கேள்வி குடியரசுத் தலைவரின் முடிவுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது ஓர் அரசமைப்பு சட்ட தேவையே ஆகும். ஒரு வேட் பாளருடைய நிலையில் அவர்கள் வைக்கப்பட வில்லை. திடீரென்று ஒருவரை தகுதி நீக்கம் செய்வது, பல பணிகளை தடம் புரளச் செய்யும் என்பதுடன், அந்த தொகுதி தனது பிரதிநிதியை இழந்து விடும். அத்தகையதொரு சூழ்நிலையைக் கையாள்வதற் காகவே பிரிவு 8 (4) சட்டமாக்கப்பட்டது. இது போன்றதொரு சட்டப் பிரிவு இல்லாமல் போனதால், ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று மக்களவை செயலகம் 2023 மார்ச் 24 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு லில்லி தாமஸ் வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாக ஊகிக்கப்படுகிறது. ஆனால், 8 (3) சட்டப் பிரிவு “தகுதி நீக்கம் செய்யப்படுவார்” என்ற சொற்களையே பயன்படுத்தியுள்ளதே அன்றி, எந்த அதிகாரியால் செய்யப்படுவார் என்று குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கை வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறைப்படி, 103 ஆவது சட்டப்பிரிவின் கீழ், அறிவிப்புக்காக குடியரசு தலை வருக்கு அனுப்பாமல், அவரை தகுதி நீக்கம் செய்யப் பட்டதாக மக்களவை செயலகத்தால் அறிவிக்க இயலாது அதற்கான அதிகாரத்தை அரச மைப்பு சட்டமோ, 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதி நிதிகள் சட்டமோ மக்களவை செயலகத்திற்கு அளித் திருக்கவில்லை. 103 ஆவது பிரிவின்படி அந்த அதி காரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது.
2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், தற்போது பதவியில் இருக்கும் உறுப்பினர் தகுதி நீக்கத்தைப் பெறுகிறார். ஆனால், அவர் குடியரசுத் தலைவரின் முடிவுப்படி “தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.” இதுதான் நுகர் வோர் சங்க வழக்கின் சாராம்சம் என்றே தோன்றுகிறது.
கவனத்தில் கொள்ளப்பட
வேண்டிய ஒரு பிரச்சினை
குற்றவியல் அவதூறு வழக்கு சட்டம் அவசரமாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் அதனை நீக்கம் செய்துவிட்டன. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலும் அது நீக்கப்பட்டுவிட்டது. தேர்தல் நேர பேச்சுகளில், நையாண்டியாக கிண்டல் செய்து பேசியதற்காக மூத்த அரசியல் தலைவர்கள் சிறைக்கு அனுப்பப்படும் சூழ்நிலை உண்மையிலேயே பெரும் அவலமாகும்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கோபாவேச மாகப் பேசும்போது, அரசியல் தலைவர்கள் பயன் படுத்தும் கடினமான, தீவிரமான நையாண்டி, கிண்டல், கேலி சொற்களைப் பற்றி ஒரு தாராளமான அணுகு முறையைக் கையாளவேண்டிய தேவையை நீதித் துறை நடைமுறையில் பின்பற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 1965 இல் வலியுறுத்தியுள்ளது.
“பொதுவாகவே பிரிவினை அரசியல் உணர்வுகள் மிகுந்ததாக இருக்கும் சூழ்நிலையில், ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டி கேலி, கிண்டல், நையாண்டியாக பேசுவது என்பது அரசியல் விளை யாட்டில் சகஜமான ஒன்றுதான். எனவே, நீதிபதியின் அறையில் அமைதியாக விவாதிக்கும்போது, அத் தகைய சொற்களுக்கு அதிக மதிப்பு அளிக்காமல் மென்மையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்” என்று குல்தார் சிங்குக்கும், முக்தியார் சிங்குக்கும் இடையேயான 1965 ஆம் ஆண்டு வழக் கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
நம் நாட்டின் பலகட்சி அரசியல் ஜனநாயகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியுமே ஆளும் கட்சியாக வருவதற்கான வாய்ப்பினையும், ஆற்றலையும் பெற் றிருக்கிறது. எனவே, ஒவ்வொரு அரசியல் தலைவர் மீதும் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்து, பல ஆண்டு காலத்துக்கு அவர்களை அரசியல் நடை முறையில் பங்கெடுத்துக் கொள்ளாமல் இருக்கச் செய்யும் ஆபத்து இருக்கிறது. முதிர்வடைந்த ஜன நாயக நாடுகளின் மக்கள் நகைச்சுவையையும் நையாண்டியையும் ரசிக்க இயன்றவர்களாக இருக்க வேண்டும். தங்களைப் பார்த்து தாங்களே சிரிப்பதற்கு மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மக்களை சிறைக்கு அனுப்பும் வேலையிலேயே நாமெல் லாம் எப்போதும் ஈடுபட்டு இருக்க வேண்டியிருக்கும்.
நன்றி: 'தி இந்து' 27-03-2023
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment