புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவிப்பு - மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவிப்பு - மரியாதை

இன்று (29.4.2023) தமிழ்நாடு அரசின் சார்பில், 'புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்' அவர்களின் 133-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரது  சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த  படத்திற்கு   செய்தித் துறை அமைச்சர்   மு.பெ. சாமிநாதன்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்   மா. சுப்பிரமணியன்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான  பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்   ஆர்.பிரியா, துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ்,  செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர்  த. மோகன்,  ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


No comments:

Post a Comment