வெளிநாடுகளின் முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 24, 2023

வெளிநாடுகளின் முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம்

சென்னை, ஏப். 24- தமிழ் நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மே மாதத்தில் இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுக ளுக்கு பயணம் மேற் கொள்கிறார்.

வரும் 2024 ஜன.11, 12ஆம் தேதிகளில் சென் னையில் உலக முதலீட் டாளர்கள் மாநாட்டை நடத்த அரசு திட்டமிட் டுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று, மே 7ஆம் தேதி 3ஆம் ஆண்டு தொடங்க உள் ளது.

இந்த சூழலில், அதிக முதலீடுகளை ஈர்ப்பது டன்,  வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பல திட்டங் களை செயல்படுத்த முத லமைச்சர் மு.க.ஸ்டா லின் முடிவு செய்துள்ளார். இதற்காக வெளிநா டுகளுக்கு சென்று முதலீ டுகளை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். 

அவர் மே 23ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. 

தொடர்ந்து, ஜப்பான், சிங்கப்பூர் செல்ல உள்ள தாகவும் கூறப்படுகிறது. அங்கு முதலீட்டாளர்கள் சந் திப்பை கருத்தில் கொண்டு, 4 அல்லது -5 நாட்கள் கொண்டதாக முதல மைச்சரின் பயணத் திட் டம் தயாரிக்கப்பட உள் ளது.

இதற்கிடையே, டென்மார்க், பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடு களுக்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென் னரசு பயணம் மேற் கொண் டுள்ளார். தொழில் துறை அதிகாரிகளும் லண்டன், ஜப்பான், சிங்கப்பூர் சென்று, தொழில் முதலீட்டு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் அமைச்சரவை கூட்டம் மே 2இல் நடக்க உள்ளது. இதில், முதலமைச்சரின் வெளிநாட் டுப் பயணம் மற்றும் புதிய முதலீடுகளுக்கான சலுகை உள்ளிட்டவற் றுக்கு ஒப்புதல் அளிக்கப் படுகிறது. 

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அன்றைய நாள் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment