பள்ளிக் கல்வித் துறையிலும் அலட்சியம் செய்த எடப்பாடி அரசு - சி.ஏ. ஜி. அறிக்கையில் உண்மை அம்பலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 27, 2023

பள்ளிக் கல்வித் துறையிலும் அலட்சியம் செய்த எடப்பாடி அரசு - சி.ஏ. ஜி. அறிக்கையில் உண்மை அம்பலம்

சென்னை, ஏப். 27-  பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அங்கமாக திகழும் 'எமிஸ்' இணையதளம் 5 ஆண்டுகளாக முறையாக பயன்படுத்தப்படவில்லை என சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அந்த வகையில் 2016இல் இருந்து 2021 வரையிலான ஆண்டுகளில் தனி யார் பள்ளிகளை பொறுத்தவரை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் நடத் திய ஆய்வுகளில் கணிசமான குறை பாடுகள் இருப்பது கண்டறியப்பட் டுள்ளதாக சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது.

பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம், கழிப்பறை உள்ளிட்ட தேவையான உள்கட்டமைப்பு வசதி குறைபாடுகள் குறித்து உயர் அதிகா ரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சி.இ.ஓ. மற்றும் டி.இ.ஓ. தனியார் பள்ளிகளை ஆய்வு செய்த தற்கான எந்தப் பதிவையும் முறையாக பராமரிக்கவில்லை எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இதன் நிகழ்நேர தரவுகள் இல்லா ததால் மாவட்டங்களின் சி.இ.ஓ.க்க ளிடம் இருந்து பெறப்பட்ட தகவல் களின் அடிப்படையில் இலவச பொருட்களுக்கு தொகுக்கப்பட்ட வேண்டிய நிலை இருந்ததாகவும், மொத்தத்தில் 'எமிஸ்' ஒரு பயனுள்ள கண்காணிப்புக் கருவியாக செயல் படவில்லை எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 மாதிரிப் பள்ளிகளில் தணிக்கைக்கு அளிக்கப்பட்ட தகவல் உண்மை நிலை யுடன் பொருந்தவில்லை என தெரிவித்துள்ள சி.ஏ.ஜி., கண்காணிப்பில் உள்ள குறைபாடுகளால் தனியார் பள் ளிகளுக்கு அங்கீகாரம் தாமதமாக வழங்க வழிவகுத்தாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment