திருவள்ளூர், ஏப்.12- தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசின் ஒப்புதலோடு திருவள்ளூர் அடுத்த பட்டறைபெரும்புதூர் கிராமத்தில் அகழாய்வுப் பணிகள் 3ஆவது கட்டமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த 6ஆம் தேதி தொல்லியல் துறை சார்பாக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இந்த இடத்தில் 3ஆவது கட்டமாக விரிவான அகழாய்வுப் பணி தொடங்கியது. காணொலி வாயிலாக தலைமைச் செயலகத்திலிருந்து விரிவான அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது தரை மட்டத்தில் இருந்து 40 சென்டிமீட்டர் ஆழத்தில் 3 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், விளையாட்டு சில்லுகள், பானை ஓடுகள் உள்ளிட்ட உபகரணங்கள் கிடைக்கப்பெற்றன.
No comments:
Post a Comment