ஒன்றிய அரசு அறிவிப்பு
புதுடில்லி, ஏப். 29- உறுப்பு கொடை செய்யும் ஊழி யர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஒன்றியப் பணி யாளர் மற்றும் பயிற்சி துறை பிறப்பித்த உத்தர வில் கூறியிருப்பதாவது:
உறுப்பு கொடை மிகப் பெரிய அறுவை சிகிச்சை. இதில் இருந்து குணமடைய அதிக காலம் ஓய்வு தேவைப்படு கிறது. உறுப்புக் கொடை செய்வது மிகவும் உன்ன தமான செயல். இதை ஒன்றிய அரசு ஊழியர்க ளிடம் ஊக்குவிக்கும் வகையில் அதிகபட்சம் 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்து உள்ளது.
இந்த சிறப்பு விடுப்பு தற்போது 30 நாட்களாக உள்ளது. அரசு மருத்துவ ரின் பரிந்துரையின் பேரில் உறுப்பு கொடை செய்யும் ஒன்றிய அரசு ஊழிய ருக்கு இனி அதிகபட்சம் 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்கப்படும். இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம், 1994-க்கு ஏற்ற வகையில் இருக்க வேண் டும். இந்த சிறப்பு விடுப்பு, இதர விடுப்புகளுடன் இணைக்கப்படாது.
உறுப்பு கொடைக் கான சிகிச்சையை, அங் கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். தனி யார் மருத்துவமனைக ளில் சிகிச்சை பெற்றால், சம்பந்தப்பட்ட துறைத் தலைவரின் சான்றிதழை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு ஒன்றியப் பணியாளர் மற்றும் பயிற்சி துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment