சேலம், ஏப். 3- ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின் புறம் உள்ள பவானி கூடுதுறை. திருமண தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்க பரி காரம் செய்வதற்கு பரிகார தலமா கவும் விளங்குகிறதாம். இங்கு தினமும் ஏராளமானோர் வந்து பரிகாரம் செய்து வருவது வழக்கம். அவ்வாறு கோவிலுக்கு பரிகாரம் செய்ய வந்த வியாபாரி ஒருவர் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங் கத்தையே தூக்கிச் சென்ற சம்பவம் நடந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நேற்று காலை கோவில் ஊழி யர்கள் பிரகாரத்தை சுற்றி வந்தனர். அப்போது கோவில் வில்வ மரத் தின் அடியில் வைக்கப்பட்டி ருந்த சிவலிங்கத்தை அங்கு காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது காலை 6.30 மணி அளவில் காவி வேட்டி அணிந்து கொண்டு வந்த பக்தர் வில்வ மரத்தின் அடியில் உள்ள சிவலிங் கத்தை பயபக்தியுடன் வழிபட்டார். பின்னர் அவர் சிவலிங்கத்தை அப்படியே தூக்கிச் சென்றதை கண்டனர். உடனே அவரை கோவில் ஊழியர்கள், பரிகார மண்டபத்தில் அவர் எங்கேனும் இருக்கிறாரா? என தேடினர். அப்போது அவர் சிவலிங்கத்தை வைத்து பரிகார பூஜை செய்து கொண்டிருந்ததை கண்டனர். உடனே அவரை அழைத்துக் கொண்டு வந்து ஊழியர்கள் விசா ரணை நடத்தினர். விசாரணையில், 'அவர் சேலம் மாவட்டம் தாரமங் கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில் பகுதியில் உள்ள கடையில் தேங்காய், பழம் விற்பனை செய் பவர் என்பதும், 41 வயது ஆகியும் அவருக்கு திருமணம் ஆகவில்லை.
இதனால் அவர் ஜோசியம் பார்த்து உள்ளார். அப்போது ஜோதிடர் ஒருவர் அந்த வியாபாரியிடம் சிவலிங்கத்தை வைத்து பரிகார பூஜை செய்தால் திருமணம் நடக்கும் என கூறி உள்ளார். இதை நம்பிய அந்த வியாபாரி பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்து சிவலிங்கத்தை தூக்கிக் கொண்டு சென்று பரிகார பூஜை செய்ததும்,' தெரியவந்தது.
இதையடுத்து பரிகாரம் செய்வ தற்காக தூக்கிக் கொண்டு சென்ற சிவலிங்கத்தை கோவில் ஊழியர் கள் கைப்பற்றி மீண்டும் வில்வ மரத்தடியில் வைத்தனர். மேலும் இது போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது எனவும் அந்த வியாபாரியை கோவில் ஊழியர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment