நாகை மாவட்டத்தில் கழகத் தோழர்களுடன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 20, 2023

நாகை மாவட்டத்தில் கழகத் தோழர்களுடன் சந்திப்பு

வைக்கம் போராட்ட 100ஆவது ஆண்டு விழா 

தெருமுனைக் கூட்டங்களை நடத்த தீர்மானம்

புத்தகரம்

புத்தகரம்,ஏப்.20- திருமருகல் ஒன்றியம், புத்தகரம் திராவிடர் கழக கிளைக்கழக கலந்துரையாடல் கூட்டம் 17.4.2023 திங்கள் காலை 10.30 மணியளவில் புத்தகரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது 

கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் மற்றும்  வைக்கம் நூற்றாண்டு சிறப்பு கிராமப் பிரச்சாரம், இயக்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்டின் சிறப்புகள்,எதிர்பார்ப்புகள், கழகத் தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்முனைப்பு இல்லாமல் இயக்கம் தலைவர் இவற்றை முன்னிலைப்படுத்தி அனைத்துத் தோழர்களும் இணைந்து செயல்பட வேண்டிய தின் அவசியம் குறித்து  உரையாற்றினார்.

தொடர்ந்து, மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, நாகை நகர அமைப்பாளர் சண்.இரவி, ஒன்றியத் தலைவர் சின்னத்துரை, சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப் பாளர் மு.இளமாறன், மாவட்ட இளைஞரணி தலைவர் இராஜ்மோகன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் இரா. குட்டிமணி, ஒன்றிய இளைஞரணி தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட மாணவர் கழக துணைத்தலைவர் ஆதித்யன், இளையராஜா, கஜோதிரன், சிறீதர், புத்தகரம் லெனின் ஆகி யோர் கழக செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்கள்,

கூட்டத்திற்கு முன்னிலை வகித்த கழக மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா ஆகியோர் நாகை மாவட்டத்தில் இதுவரை நடந்த இயக்க செயல்பாடுகள் 2023 ஆண்டில் செய்ய திட்டமிட்டுள்ள திட்டங்கள், கிராமங்கள்தோறும் பிரச்சாரம் நடந்திட கழகத்தோழர்கள் முனைய வேண்டும் என உரை யாற்றினர்.

கிளைக்கழக தோழர்கள் மகளிர் உட்பட 40க்கும் மேற் பட்ட தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

செருநல்லூர் பட்டு, சந்திரா, ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் 4 கட்டங்களாக தமிழ்நாடு, புதுவை இரண்டு மாநிலங் களில் 30 நாட்கள்  57 பொதுக்கூட்டங்களில் உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.

தந்தைபெரியாரின் மனித உரிமைப் போர் வைக்கம் போராட்ட 100ஆவது ஆண்டு விழா தெருமுனை கூட்டங் களை நாகை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களும் கிராமப் பிரச்சாரமாக  நடத்துவது,

அனைத்து பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களைச் சேர்த்து  கழக அமைப்புகளை புதுப்பிப்பது,

விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது,

இளைஞர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரு நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு திட்டமிடப் பட்டது,

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க முயற்சித்த ஒன்றிய அரசின் முடிவை போராடி தடுத்து நிறுத்தி  டெல்டா பகுதி விவசாயத்தை பாதுகாத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கும்  இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது,

மே - 7 தாம்பரத்தில் நடைபெறும் திராவிடர் கழக தொழி லாளரணி  மாநில மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புத்தகரம் கிளைக்கழக தலைவர்-சிறீதர்

திருசங்காட்டாங்குடி

திருமருகல் ஒன்றியம், நத்தம், திருசங்காட்டாங்குடி திராவிடர் கழக கிளைக்கழக கலந்துரையாடல் கூட்டம் 17-04-2023 திங்கள் மாலை 6 மணியளவில் நத்தம் நாத்திக பொன்முடி இல்லத்தில்  நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் மற்றும்  வைக்கம் நூற்றாண்டு விழா கிராம பிரச்சாரம், இயக்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்டின் சிறப்புகள், எதிர்பார்ப்புகள், கழகத் தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்முனைப்பு இல்லாமல் இயக்கம் - தலைவர் இவற்றை முன்னிலைப்படுத்தி அனைத்து தோழர்களும் இணைந்து செயல்பட வேண்டிய தின் அவசியம் குறித்து  உரையாற்றினார் 

தொடர்ந்து, மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, நாகை நகர அமைப்பாளர் சண்.இரவி, ஒன்றியத்தலைவர் சின்னத்துரை, மாவட்ட இளைஞரணி தலைவர் இராஜ்மோகன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் இரா.குட்டிமணி, மாவட்ட மாணவர் கழக தலைவர் பாக்கியராஜ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அறிவுமணி, நத்தம் மதி, ஜெயப்பிரியா, சாந்தி, கண்ணகி, அறிவாளன், கஜேந்திரன், குருநாதன் ஆகியோர் கழக செயல்பாடுகள் குறித்து உரை யாற்றினார்கள்,

கூட்டத்திற்கு முன்னிலை வகித்த கழக மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா ஆகியோர் நாகை மாவட்டத்தில் இதுவரை நடந்த இயக்க செயல்பாடுகள் 2023 ஆண்டில் செய்ய திட்டமிட்டுள்ள திட்டங்கள், கிராமங்கள்தோறும் பிரச்சாரம் நடந்திட கழகத்தோழர்கள் முனைய வேண்டும் என உரை யாற்றினர்.

நத்தம் சி.பி. கண்ணு, சி.பி.க.நாத்திகன், நாத்திக சாக்ரட்டீஸ், அகரமுதல்வன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் 4 கட்டங்களாக தமிழ்நாடு, புதுவை இரண்டு மாநிலங் களில் 30 நாட்கள்  57 பொதுக்கூட்டங்களில்உரையாற்றி விழிப் புணர்வை ஏற்படுத்திய தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.

தந்தை பெரியாரின் மனித உரிமைப் போர் வைக்கம் போராட்ட 100 ஆவது ஆண்டு விழா தெருமுனைக் கூட்டங் களை நாகை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களும் கிராமப் பிரச்சாரமாக  நடத்துவது,

அனைத்து பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து  கழக அமைப்புகளை புதுப்பிப்பது,

விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது,

இளைஞர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரு நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு திட்டமிடப் பட்டது,

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க முயற்சித்த ஒன்றிய அரசின் முடிவை போராடி தடுத்து நிறுத்தி  டெல்டா பகுதி விவசாயத்தை பாதுகாத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

மே - 7 தாம்பரத்தில் நடைபெறும் திராவிடர் கழக தொழி லாளரணி  மாநில மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்பது,

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட மகளிர் பாசறை செயலாளராக நத்தம் ஜெயப்பிரியா

நத்தம் கிளைக்கழக தலைவராக மதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

வாழ்குடி

திருமருகல் ஒன்றியம், வாழ் குடி திராவிடர் கழக கிளைக்கழக கலந்துரையாடல் கூட்டம் 17-04-2023 திங்கள் மாலை 3 மணியளவில் வாழ்குடியில் நடைபெற்றது 

கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் மற்றும்  வைக்கம் நூற்றாண்டு விழா கிராம பிரச்சாரம், இயக்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்டின் சிறப்புகள், எதிர்பார்ப்புகள், கழகத் தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்முனைப்பு இல்லாமல் இயக்கம் - தலைவர் இவற்றை முன்னிலைப்படுத்தி அனைத்துத் தோழர்களும் இணைந்து செயல்பட வேண் டியதின் அவசியம் குறித்து  உரையாற்றினார் 

தொடர்ந்து, மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, நாகை நகர அமைப்பாளர் சண்.இரவி, ஒன்றியத்தலைவர் சின்னத்துரை, மாவட்ட இளைஞரணி தலைவர் இராஜ்மோகன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் இரா.குட்டிமணி, ஒன்றிய அமைப்பாளர் செல்வக்குமார் ஆகியோர் கழக செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்கள்,

கூட்டத்திற்கு முன்னிலை வகித்த திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா ஆகியோர் நாகை மாவட்டத் தில் இதுவரை நடந்த இயக்க செயல்பாடுகள் மற்றும் 2023 ஆண்டில் செய்ய திட்டமிட்டுள்ள திட்டங்கள், கிராமங்கள் தோறும் பிரச்சாரம் நடந்திட கழகத்தோழர்கள் முனைய வேண்டும் என உரையாற்றினர்

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் 4 கட்டங்களாக தமிழ்நாடு, புதுவை இரண்டு மாநிலங்களில் 30 நாட்கள்  57 பொதுக்கூட்டங்களில் உரை யாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது

தந்தைபெரியாரின் மனித உரிமைப் போர் வைக்கம் போராட்ட 100 ஆவது ஆண்டு சிறப்பு தெருமுனைக் கூட்டங் களை நாகை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் கிராம பிரச்சாரமாக  நடத்துவது

அனைத்து பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து  கழக அமைப்புகளை புதுப்பிப்பது,

விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது

இளைஞர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து ஒருநாள் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு திட்டமிடப் பட்டது

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க முயற்சித்த ஒன்றிய அரசின் முடிவை போராடி தடுத்து நிறுத்தி  டெல்டா பகுதி விவசாயத்தை பாதுகாத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்க ளுக்கும்  இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது

மே - 7 தாம்பரத்தில் நடைபெறும் திராவிடர் கழக தொழி லாளரணி  மாநில மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

வாழ்குடி கிளைக்கழக தலைவராக-தவமணி

செயலாளராக - இந்திரஜித் ஆகியோர் அறிவிக்கப் பட்டனர்.

No comments:

Post a Comment