உச்சநீதிமன்றத்தில் கருநாடக அரசுக்கு தலைகுனிவு - சித்தராமையா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 16, 2023

உச்சநீதிமன்றத்தில் கருநாடக அரசுக்கு தலைகுனிவு - சித்தராமையா

பெங்களூரு, ஏப். 16- முஸ்லிம் மக்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து வழக்கில் உச்சநீதி மன்றத் தில் கருநாடக அரசுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள் ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.

 கருநாடக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூ ருவில் பேட்டி அளித்த போது கூறியதாவது: இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய் யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கருநாடக பா.ஜ.க. நாடக அரசை கண்டித்துள்ளது.

சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ஹிந்து ஓட்டுகளை பெற வேண் டும் என்ற நோக்கத்தில் மாநில இத்தகைய முடிவை எடுத்தது.

இந்த விடயத்தில் கருநாடக அரசு எடுத் துள்ள முடிவு தவறான எண்ணத்தில் எடுக்கப் பட்டதாக தெரிவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த விஷயத்தில் கருநாடக அரசுக்கு தலை குனிவு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் கல்வி யில் மட்டும் பின்தங்கி இருப்பதாக சின்னப்ப ரெட்டி ஆணையம் கூறி யுள்ளதாக ஒன்றிய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

இது தவறான தகவல். அந்த ஆணையம், முஸ்லிம்கள் சமூக ரீதியாகவும் பின்தங்கியுள்ளனர் என்று கூறியுள்ளது. எந்த விதமான ஆய்வையும் நடத்தாமல், இஸ்லாமி யர்களின் இட ஒதுக் கீட்டை ரத்து செய்தது.

 அரசியல் நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆகும். இடஒதுக்கீடு குறைந்துவிடும் மாநில அரசின் இந்த முடிவு ரத்தானால், லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு குறைந்துவிடும். 

ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டை 75 சதவீத மாக உயர்த்தினால் மட் டுமே அனைத்து சமூகங்க ளுக்கும் உரிய இட ஒதுக் கீட்டை பகிர்ந்து அளிக்க முடியும்.

மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்ட கூடாது என்று உச்சநீ திமன்றம் தீர்ப்பு கூறி யுள்ளது.

ஜாதிவாரி மக்கள் தொகை கண்கெடுப்பு அறிக்கை அரசிடம் உள் ளது. அதன்படி இடஒதுக் கீட்டை உயர்த்தினால் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். 

அதனால் மொத்த இடஒதுக்கீட்டை அதிகரிக்க ஒன்றிய அரசு அரசமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு  சித்தராமையா கூறினார்.

No comments:

Post a Comment