சென்னையும் - டில்லியும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 30, 2023

சென்னையும் - டில்லியும்

ஒன்றிய அரசு நடத்திய பன்னாட்டு விளையாட்டுப் போட்டியின் அவலட்சணம் பாரீர்!

பன்னாட்டு சதுரங்க விளையாட்டு ஒருங் கிணைக்கும் கூட்டமைப்பின் பெண்கள் செஸ் கிராண்ட் பிரிக்ஸ் தொடர், ஒன்றிய அரசின் சார்பில் தலைநகர் டில்லியில் நடைபெற்றது. இதில் ஆர்வத் தோடு கலந்துகொண்டு விளையாட வந்த பல வீராங்கனைகள் தாங்கள் சரியாக நடத்தப்படவில்லை என விமர்சித்து செஸ் கிராண்ட் பிரிக்ஸ் தொடரைப் புறக்கணித்துள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து, பன்னாட்டு சதுரங்க கூட்ட மைப்பின் தலைவரான ஆர்கடி டிவோர்கோவிச் பகிரங்கமாகத் தனது மன்னிப்பை வெளிப்படுத்தி யுள்ளார்.

மேலும், இதில் எங்கே தவறு நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் பாரத் சிங் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டதோடு நான் போட்டி மேற்பார்வையாளன் மட்டுமே, ஏற்பாடுகளை எல்லாம் நான் செய்யவில்லை என்று தட்டிக் கழித்து விட்டார்.

உலக அளவில் நடைபெறும், சதுரங்க வாகையர் போட்டிகளில் பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் தொடர் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.இது இந்தி யாவில் நடைபெற்ற முதல் கிராண்ட் பிரிக்ஸ் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் பங்கேற் பதற்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் செஸ் வீராங்கனைகள் இந்தியாவுக்கு வந்தனர். இந்தப் போட்டியின் துவக்கவிழா, கடந்த மார்ச் 23ஆம் தேதி நடைபெற்றது.

மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் தொடர் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரின் முதல் இரண்டு கட்ட போட்டிகள் முன்னதாக கஜகஸ்தான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடைபெற்றன. இந்தத் தொடரின் மூன்றாவது கட்ட போட்டி டில்லியில், மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடந்தது.

கிராண்ட் பிரிக்ஸ் தொடர் இந்தியாவில் நடை பெறுவது, விளையாட்டு வீரர்கள் மத்தியில் மிகப் பெரும் வாய்ப்பாகக் கருதப்பட்டு வந்த சூழலில், இந்த செஸ் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்த கஜகஸ்தான் வீராங்கனை ஸான்சியா அப்துல்மாலிக், தனக்கு முறையான வரவேற்பு அளிக்கப்படவில்லை என்று கூறி போட்டியிலிருந்து விலகினார்.

இதில் கலந்துகொள்ளவந்த பல வெளிநாட்டு வீராங்கனைகள் கூறும் போது, “டில்லி விமான நிலையத்திற்கு வந்தபோது ஒருங்கிணைப்பவர்கள் எங்களை மறந்துவிட்டார்கள். எங்களை வரவேற் பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவரை  தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம், ஆனால் நீண்ட நேர காத்திருப்பிற்குப் பிறகு சில ஓட்டுநர்கள் வந்து எங்களை பாதுகாப்பில்லாத ஒரு தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து வெளியே பார்த்தால் குப்பைகளும் அதில் தீ வைத்து எரித்ததால் ஏற்பட்ட புகையும் எங்கள் தங்குமிடத்தை மேலும் மோசமாக்கியது என்றனர்.

கடந்த ஆண்டு ஒலிம்பியாட் தொடருக்காக மாமல்லபுரம் வந்திருந்த ஆயிரக்கணக்கான வீரர் களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தத் தொடருக்காக வந்திருந்த வெறும் 12 பேருக்கு ஏற்பாடுகள் செய்வது அவ்வளவு கடின மான காரிய மல்ல என்று நினைக்கிறோம்.

இதுவே ஒரு சிறந்த ஆண் போட்டியாளர், தொடரில் பங்கேற்க வந்து, இதேபோன்ற நிலைமை ஏற்பட்டி ருந்தால், என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட் டிருக்கும் என்பதை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ” என்று கூறியுள்ளனர்.

 மேலும் பங்கேற்கவந்த ஒரு வீராங்கனை, கிராண்ட் பிரிக்ஸ் தொடர் ஏற்பாட்டை அவர் சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலிம்பியாட் செஸ் தொடருக்கான ஏற்பாட்டோடு ஒப்பிட்டு கூறியிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.” டில்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை இருக்கிறது என்பது பன்னாட்டு சதுரங்கவிளையாட்டு கூட்டமைப்பிற்குத் தெரியும்.

தங்கியிருந்த ஓட்டலை சேர்ந்தவர்கள், என்னை வெளியே போக வேண்டாம் எனக் கூறியிருந்தனர். அது பாதுகாப்பனதாக இருக்காது எனவும் அவர்கள் அறிவுறுத்தினர்.

சென்னையில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டி - சிறந்த அனுபவம்

"நான் இந்தியாவை நேசிக்கிறேன். சென்னையில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றது, எனக்குச் சிறந்த அனுபவமாக இருந்தது. அதுகுறித்த நிறைய நல்ல நினைவுகள் எனக்கு இருக்கின்றன. ஆனால் டில்லியில் ஏதோ தவறாகப் போய்விட்டது. இத்தகைய நிலையில், என்னால் இங்கே தொடர்ந்து இரண்டு வாரங்கள் தங்கியிருந்து விளையாட முடியும் என்று தோன்றவில்லை,” என்று ஸான்சயா அப்துல் மாலிக் தனது பதிவில் கவலையுடன் குறிப்பிட்டிருந்தார்.

"சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் விளையாட்டுகளில் விளையாடுவதற்கு நாங்கள் தகுதி யானவர்கள்; எனவே எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால், நான் விளையாட்டிலிருந்து வெளியேறு வதற்கு முடிவு செய்தேன். நான் ஒரு சிறந்த வீராங்கனை என்பது அனைவருக்கும் தெரியும்; ஆகவே காரண மில்லாமல் நான் எந்தவொரு போட்டியிலிருந்தும் வெளியேற மாட்டேன்,” என்றும் அவர் குறிப் பிட்டிருந்தார்.

“கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் இதுபோன்ற நிகழ் வுகள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” எனவும் சிலர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். ஸான்சயா அப்துல் மாலிக்கை போலவே, எலிசபத் பார்ட்ஸ் என்ற ஜெர்மன் வீராங்கனையும் தொடரை விட்டு வெளியேறினார். கிராண்ட் பிரிக்ஸ் தொடங்கு வதற்கு சரியாக ஒரு மணி நேரத்திற்கு முன்னால், தான் இந்த போட்டியில் பங்கேற்கப் போவதில்லை எனக் குறிப்பிட்ட கடிதத்தை பன்னாட்டு செஸ் கூட்டமைப் பிடம் ஒப்படைத்தார் எலிசபத். கிராண்ட் பிரிக்ஸ். தொடர் தொடங்குவதற்கு முந்தைய இரண்டு நாட்களில், நடந்த சில நிகழ்வுகள் தன்னை வெகுவாகப் பாதித்ததாக அவர் கூறினார். மேலும், "அதனால் தனக்குள் ஏற்பட்ட தாக்கங்கள், விளையாடுவதற்கு இடையூறாக இருக்கும்" என்று குறிப்பிட்டு, கிராண்ட் பிரிக்ஸ் தொடரிலிருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்திருந்தார். 

இந்தச் நிகழ்வுகள் குறித்து, பன்னாட்டு செஸ் கூட்டமைப்பின் தலைவரான ஆர்கடி டிவோர்கோவிச் பகிரங்கமாகத் தனது மன்னிப்பை வெளிப்படுத்தி யுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பன்னாட்டு செஸ் கூட்டமைப்பு சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு ஏற்பட் டுள்ள இந்தக் கசப்பான அனுபவங்கள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அதிருப்திகள் குறித்து நாங்கள் புரிந்து கொள்கிறோம். இந்தப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியதற்கு நன்றி. விளையாட்டில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரர்களும் எங்களுக்கு முக்கியம்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக் கப்படுவார். இந்தப் போட்டியில் பங்கேற்க வந்திருந்த மற்ற போட்டியாளர்களின் நிலை கருதி இந்த கிராண்ட் பிரிக்ஸ் தொடர், தொடர்ந்து நடத்தப் பட்டது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக ஸான்சயாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் மன்னிப்பு தெரிவித்திருந்த ஆர்கடி டிவோர்கோவிச், பின்னர் இந்த முழுமையான அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேச மறுத்த இந்திய செஸ் கூட்டமைப்பு செயலாளர்

பெண்களுக்கான இந்த கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடர் ஒருங்கிணைப்பில் எங்கே தவறு நடந்தது என்பது குறித்துக் கேட்பதற்காக முன்னதாக, அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் பாரத் சிங்கை தொடர்புகொண்டபோது. “போட்டிகள் ஆரம் பித்துவிட்டன. எனவே இதுகுறித்து நான் எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை,” என்று கூறி தொடர்பைத் துண்டித்துவிட்டார்

- பாணன்


No comments:

Post a Comment