பெங்களூரு, ஏப். 3- பல லட்சம் பாக்கெட்டுகள் அச்சாகிவிட்டன. ஆகவே ‘தஹி’ என்று பதித்த பாக்கெட்டுகள் விநியோகிப்பை நிறுத்த முடியாது என்று கருநா டக பால்வளத்துறை புதிய விளக்கம் கொடுத் துள்ளது.
கருநாடக மாநில பால்வளத்துறை அமைச் சகம் சார்பில் நந்தினி, (தமிழ்நாட்டில் ஆவின் போல்) என்ற நிறுவனம் பால் பொருட்களை விநியோகித்து வருகிறது. முழுக்க முழுக்க கருநாடக அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த நிறுவனம் திடீரென கடந்த பிப்ரவரி மாதம் முதல் தயிர் பாக்கெட்டுகளின் மீது ஹிந்தியில் ‘தஹி’ என்று எழுதி விநியோகித்து வந்தது.
இது தொடர்பாக கன்னட அமைப்பினர் அரசை கேள்வி கேட்டபோது “கன்னட மொழி யில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ளது, கன்னடம் புரியாத மக்களுக்காக ‘தஹி’ என்று எழுதியுள் ளோம்” என்று விளக்கம் கொடுத்தது. ஆங்கிலத்தில் காலம் காலமாக கர்டு (CURD) என்றும், கன்னடத்தில் மொசறு (Mosaru) என்றும் இருக்கும் போது தஹி என்று ஏன் குறிப்பிட வேண்டும் என்று கேள்வி எழுந்த நிலையில் ஒன்றிய அரசு ஹிந்தி பேசாத மாநிலங்களில் இனி மேல் தஹி என்று தயிர் பாக்கெட்டுகளின் மீது அச்சிடுங்கள் என்று அறிவிப்பை வெளியிட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே கோபத் தோடு இதை எதிர்த்துக் கேட்டவுடன் பின்வாங்கிக் கொண் டார்கள்.
ஆனால் கருநாடகாவில் இன்றும் அப்படியே தொடர்கிறது, காரணம் கேட்டால் “பல லட்சம் பாக்கெட்டுகள் அச்சிடப்பட்டு விட்டன. ஆகவே இந்த ஸ்டாக் இருக்கும் வரை இப்படித் தான் வரும்” என்று அலட்சியமாக கருநாடக பால்வளத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment