ஏவுகணைகளுக்காக செலவிடும் பணத்தில் 800 பள்ளிகளைக் கட்டியிருக்கலாம் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 13, 2023

ஏவுகணைகளுக்காக செலவிடும் பணத்தில் 800 பள்ளிகளைக் கட்டியிருக்கலாம் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

டோக்கியோ, ஏப். 13- அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதற்கு, ஜப்பான் எதிர்க் கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் பதற்றத்தை உருவாக்கி அல்லது பதற்றம் இருப் பதாகப் பரப்பி விட்டு, ஆயுதங்களை பிற நாடுகளின் தலையில் கட்டும் வேலையை அமெரிக்கா செய்து வருகிறது.  

அந்நாட்டின் ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் கொள்ளை லாபத்தை சம்பாதிக்கின்றன. சில நாடுகளுக்கு உதவி என்ற பெயரில் அமெரிக்க மக்களின் வரிப்பணத் தையும் சூறையாடுகிறார்கள். சீனா வைக் காரணம் காட்டி பயமுறுத்தி ஜப்பானுக்கு பல லட்சம் கோடி டாலர்களில் ஆயுதங்களை அமெ ரிக்கா வழங்குகிறது. 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக் கையை ஆளும் கூட்டணி தயா ரித்து நாடாளுமன்றக் குழு முன் னால் வைத்தது. மொத்தம் 114 லட்சம் கோடி யென் மதிப்பிலான அறிக்கையைத் தயார் செய்திருந் தார்கள். தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு அந்த அறிக்கைக்கு ஒப்புத லையும் பெற்றிருக்கிறார்கள். 

இது குறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தனியாக ஜப்பான் கம் யூனிஸ்ட் கட்சி வெளி யிட்டிருக் கிறது. இத்தகைய ஆயுதங்களை வாங்குவதை விட்டு, அதை மக்கள் நலன் களுக்காகச் செலவிட்டால், சமூக நல நடவடிக்கை களை மேற் கொள்ள முடியும் என்று கூறியுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு ஏவுகணை வாங்குவதை நிறுத்தினால், 90 குழந்தைகள் படிக்கக்கூடிய ஒரு தொடக்கப்பள்ளியை உருவாக் கிடலாம். 400  ஏவுகணைகளை வாங்கப் போகிறார்கள். இதில் 800 பள்ளிகளைக் கட்டியிருக்கலாம். மூன்று ஏவு கணைகள் வாங்குவதை நிறுத்தினால் 120 மூத்த குடிமக்கள் தங்கக் கூடிய நலக்கூடம் ஒன்றை உருவாக்கிடலாம் என்று சுட்டிக் காட்டியிருக்கிறது. நடப்பாண்டில் மட்டுமல்ல, வரக்கூடிய ஆண்டு களிலும் லட்சக்கணக்கான கோடி யென்னைச் செலவு செய்ய ஜப்பான் அரசு திட்ட மிட்டுள்ளது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 6.8 லட்சம் கோடி யென் என்பது, அய்ந்தாண்டு செலவுத் திட்டத்தின் முதல் தவணை என்கிறார்கள். அய்ந்து ஆண்டுகளில் 43 லட்சம் கோடி யென் அளவுக்கு நிதி ஒதுக் கீடு செய்து மக்கள் மீதான சுமை அதிகரிக்கும் என்று கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சி களும் எச்சரித்திருக்கின்றன.

No comments:

Post a Comment