சென்னை மாநகராட்சியில் 786 பூங்காக்களில் புனரமைப்பு பணிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 15, 2023

சென்னை மாநகராட்சியில் 786 பூங்காக்களில் புனரமைப்பு பணிகள்

சென்னை, ஏப். 15- மாநகராட்சி பூங்காக்களில் மக்க ளுக்கு மனநிறைவு அளிக்கும் வகையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநக ராட்சியில் 786 பூங்காக்கள் பயன்பாட்டில் உள்ளன. இப்பூங்காக்களை சீரமைத்து, புனரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, ஒவ்வொரு பூங்காவிலும் 6 அடி உயரத்தில் 50 முதல் 100 எண்ணிக்கையில் நாட்டு மரக்கன்றுகள் நடுதல், செடிகள் நடுதல், புல்வெளி அமைத்தல், சுவர்களில் வர்ணம்பூசுதல், அமரும் இருக்கைகளை சீரமைத்தல், கூடுதலாக இருக்கைகள் அமைத்தல், விளையாட்டு உபகரணங்களை புதுப்பித்தல், புதிதாக நடைப்பயிற்சி பாதைகள் அமைத்தல், மின்விளக்குகளை சரிசெய்தல், செயற்கை நீருற்று அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்களை பொது மக்களின் பொழுதுபோக்குக்கு சிறந்த இடமாக மாற்றும் வகையில் இப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ உபகரணங்களுக்கு பதிவு உரிமம் 

மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

சென்னை,ஏப்.15- இந்தியாவில் மருந்துகளின் தரத்தை உறுதிசெய்ய ஒழுங்குமுறை விதிகள் இருந் தாலும், மருத்துவ உபகரணங்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

ஒன்றிய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்கு முறைப்படுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. இதை யடுத்து அவற்றை தரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிரிவு சி மற்றும் டி வரையறைக்குக் கீழ் உள்ள அறிவிக்கை செய்யப்படாத மருத்துவ உபகரணங் களைத் தயாரிப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும் பதிவு உரிமம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. நடப்பாண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி முதல்புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்றும், பதிவு உரிமம் கோரி சம்பந்தப் பட்ட நிறுவனங் கள் மருந்து தரக் கட்டுப்பாட்டு இணை யப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. அவ்வாறு உரிமம் கோரி விண்ணப்பித்தால், நேரடி ஆய்வு மேற்கொண்டு உரிமம் வழங்கப்படும் என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment